September, 2017    
தேசியக் கருத்தரங்கத் தொடக்கவிழா
நிகழ்வு நாள் :
19.02.2014
தலைப்பு : தொடரியல் கோட்பாடுகளின் வளர்ச்சி - தொல்காப்பியத்தை முன்வைத்து
   
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66ஆவது பிறந்தநாள் பெருவிழாவை முன்னிட்டு பிப்ரவரித் திங்கள் முழுவதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 28 ஆய்வரங்கங்கள், 38 நூல் வெளியீடுகள், 106 கவிஞர்களின் கவியரங்கம், 66 மாணவர்களின் குறள் முற்றோதல் மற்றும் 100 கலைஞர்களின் கலை நிகழ்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒவ்வொன்றும் காலவரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ்வரிசையில் இன்று 19.02.2014 புதன்கிழமை முற்பகல் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியுதவிடன் ‘தொடரியல் கோட்பாடுகளின் வளர்ச்சி - தொல்காப்பியத்தை முன்வைத்து’ எனும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத் (19.02.2014 - 21.02.2014) தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் பாரதியார் பல்கலைக்கழக மேனாள் மொழியியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் செ. சண்முகம் அவர்கள் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய மேனாள் இயக்குநர் பேராசிரியர் முனைவர்    செ.வை. சண்முகம் அவர்கள் மையக்கருத்துரையாற்றினார்.    முனைவர் கு.சிதம்பரம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுவரும் கருத்தரங்கின் தொடக்கவிழா நிறைவில் முனைவர்   ஆ. தசரதன் அவர்கள் நன்றியுரையாற்ற கருத்தரங்கம் இனிதே துவங்கியது.