June, 2017    
மாநில அளவில் பேச்சு, கட்டுரை, கவிதைப்போட்டி
நிகழ்வு நாள் :
22.02.2014
தலைப்பு : மாநில அளவில் பேச்சு, கட்டுரை, கவிதைப்போட்டி
   
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66ஆவது பிறந்தநாள் பெருவிழா பிப்ரவரித் திங்கள் முழுவதும் 28 ஆய்வரங்கங்கள், 38 நூல் வெளியீடுகள், 106 கவிஞர்களின் கவியரங்கம், 66 மாணவர்களின் குறள் முற்றோதல் மற்றும் 100 கலைஞர்களின் கலை நிகழ்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொன்றும் காலவரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ்வரிசையில் 22.03.2014 சனிக்கிழமை அன்று முற்பகல் மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க வளாகத்தில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டி நடைபெற்றது. பிற்பகல் 5.00 மணியளவில் போட்டிகளுக்கானப் சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப.  அவர்கள் இவ்விழாவிற்குத் தலைமையுரை ஆற்றி, போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரொக்கத் தொகையுடன் சான்றிதழையும் வழங்கிப் பாராட்டினார். இப்போட்டிகளில் மாநில அளவிலான 160 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அடையாறு மண்டலம் மேனாள் தலைவர் ஆர். ராஜேந்திர பாபு, சைதை ஆர்.எஸ். மணி, சமூகநீதி எம். மாதவன், தி.தெ.மா.மா.அ.பொ ச. வெங்கடேசன், பி.ஈ.,பி.எல்., சு. உமாபதி, பி.பி.ஏ. சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
                
பேச்சுப்போட்டி  - அம்மாவும் அன்னைத்தமிழும் ,  
கவிதைப் போட்டி - அம்மாவின் ஆட்சி! அருந்தமிழின் மாட்சி!,
கட்டுரைப் போட்டி - அம்மாவின் ஆட்சியில்  விண்ணைத்தொடும் சாதனைகள்
 
மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்றோர்.
 
பேச்சுப்போட்டி
முதல் பரிசு - செல்வி அனுகிரகா ஆதீபகவன் ரூ.5,000 ( எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை )
இரண்டாம் பரிசு - இரா. கார்த்திக் ராஜா ரூ.3,000 (சுவாமி தயானந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாரூர் )
மூன்றாம் பரிசு - கோ. மணி ரூ.2,000 ( து.கோ. வைணவக் கல்லூரி, சென்னை )
 
கவிதைப் போட்டி
முதல் பரிசு - ரா. ஐஸ்வரியா ரூ.5,000 ( நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி, சென்னை )
இரண்டாம் பரிசு - ப. அஸ்வினி ரூ.3,000 ( இந்துக் கல்லூரி, பட்டாபிராம், திருவள்ளூர் மாவட்டம் )
மூன்றாம் பரிசு - சா. காளிதாஸ் ரூ.2,000 ( அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி )
 
கட்டுரைப் போட்டி
முதல் பரிசு - ம. நித்திஷ் ரூ.5,000 ( இந்துக் கல்லூரி, பட்டாபிராம், திருவள்ளூர் மாவட்டம் )
இரண்டாம் பரிசு - ரா. சுவாதி ப்ரியா ரூ.3,000 ( ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி )
மூன்றாம் பரிசு - அ. மரகதாம்பாள் ரூ.2,000 ( ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர், திருவள்ளூவர் மாவட்டம் )