August, 2017    
டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும்
நிகழ்வு நாள் :
24.02.2014
தலைப்பு : சாகுந்தலம்
   
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66ஆவது பிறந்தநாள் பெருவிழா பிப்ரவரித் திங்கள் முழுவதும் 28 ஆய்வரங்கங்கள், 38 நூல் வெளியீடுகள், 106 கவிஞர்களின் கவியரங்கம், 66 மாணவர்களின் குறள் முற்றோதல் மற்றும் 100 கலைஞர்களின் கலை நிகழ்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொன்றும் காலவரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ்வரிசையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளான 24.02.2014 திங்கட்கிழமை அன்று முற்பகல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் டாக்டர் ஜெ ஜெயலலிதா அறக்கட்டளையில்  பணி நிறைவுபெற்ற நில நிர்வாகத் துறை, துணை ஆணையர் துருவன் கோபாலகிருட்டிணன் அவர்கள் ‘சாகுந்தலம்’ (கவிதை நாடகம்) என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்பொழிவு நூலாக வெளியிடப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நூலை திரையிசைப் பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அவ்வறக்கட்டளை மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களும் கலந்துகொண்டனர்.