August, 2017    
13 நூல்கள் வெளியீடு
நிகழ்வு நாள் :
25.02.2014
தலைப்பு : 13 நூல்கள் வெளியீடு
   
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66ஆவது பிறந்தநாள் பெருவிழாவை முன்னிட்டு இன்று (25.02.2014) 13 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்  முனைவர்கோ. விசயராகவன் தலைமையுரையாற்றினார்.  முனைவர் கா.மு. சேகர்,  இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, கம்பர் விருது முனைவர் பாலரமணி இயக்குநர், பொதிகைத் தொலைக்காட்சி, சொல்லின்செல்வர் விருது முனைவர் லோகநாயகி பேராசிரியர்,  இராணிமேரி கல்லூரி, சென்னை , கவிஞர் சுரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநீதி எம். மாதவன்,  கவிஞர் துரை. இராசமாணிக்கம், கவிஞர் ப.கோ. நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.  நிறைவாக முனைவர் நா. சுலோசனா அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.
 
வெளியிடப்பட்ட நூல்கள் :
  • கதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும் ( 4 தொகுதிகள்  )  - முனைவர் சு. தாமரைப்பாண்டியன்
  • சிலப்பதிகார இலக்கியக் கட்டமைப்பு -  பதிப்பாசிரியர்கள்  முனைவர் கோ. விசயராகவன்  & முனைவர் தி. மகாலட்சுமி
  • தமிழர் பண்பாட்டில் சிலப்பதிகாரம் - முனைவர் தி. மகாலட்சுமி
  • வளர்ச்சிப் பாதையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் -  முனைவர் கோ. விசயராகவன் & முனைவர் மு. வளர்மதி
  • ஓலைச்சுவடியியல் -  முனைவர் ஆ. தசரதன்
  • தமிழில் பிழை ஆய்வுகள் - முனைவர் ஆ. தசரதன்
  • மொழிபெயர்ப்பு நூற்றொகை தொகுதி 2, 3  - முனைவர் இரா. மோகனா
  • சீனக் கவிஞர் கு மொரோவின் தேவதைகள்  - (கவிதைத் தொகுப்பு) தமிழில் மொழிபெயர்ப்பு  முனைவர் கு. சிதம்பரம் 
  • செவ்விலக்கியச் சாரம்  -  முனைவர் நா. சுலோசனா