April, 2017    
திருமந்திரமும் வாழ்வியலும் - பட்டயப் படிப்புத் தொடக்கவிழா
நிகழ்வு நாள் :
02.05.2014
தலைப்பு : திருமந்திரமும் வாழ்வியலும் - பட்டயப் படிப்புத் தொடக்கவிழா
   

02.05.2014 வெள்ளிக்கிழமையன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்கும் திருமந்திரமும் வாழ்வியலும் - பட்டயப் படிப்புத் தொடக்கவிழா நடைபெற்றது. மயிலை பா.சற்குருநாதன் ஓதுவார் குழுவினர் திருமுறைப் பண் இசைத்தனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். திருவாவடுதுறை ஆதினம், இருபத்திநான்காவது குருமகா சன்னிதானம், ஶ்ரீலஶ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்து, பட்டயப் படிப்பிற்கான பாடநூலை வெளியிட்டு ஆசி வழங்கினார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் குருமகாசன்னிதானம் அவர்களுக்கு மரியாதை செய்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் அவர்களுக்கு குருமகாசன்னிதானம் பொன்னாடையுடன் ஆசிர்வாதம் செய்தார்கள். திருவாவடுதுறை ஆதினம், குருமகாசன்னிதானம் அவர்கள் பட்டயப்படிப்பினைத் தொடங்கிவைத்து அருளாசி வழங்கினார்கள்.