April, 2017    
நிறுவன நிகழ்ச்சிக் குறிப்பு
நிகழ்வு நாள் :
30.07.2014
தலைப்பு : நிறுவன நிகழ்ச்சிக் குறிப்பு
   
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய தலைமையின்கீழ் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒல்லும் வகையெல்லாம் தமிழை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் தமிழைத் தாய்மொழித் தாய்மொழியல்லாத பிற மொழிக்காரர்களுக்குத் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்புகள் ஆழ்நிலை வகுப்புகள் (Intensive Courses), அறிமுக வகுப்புகள் (Introductory Courses), உயர்நிலை வகுப்புகள் (Advanced Courses) என பாடத்திட்டத்தை வகுத்து பட்டயப் படிப்பாகவும் சான்றிதழ் படிப்பாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக இதுவரை 500க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிக்குடும்பத்தைச் சார்ந்த அயல்நாட்டினர் பயிற்சிபெற்று பயனடைந்துள்ளனர்.
 
                சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் ஓர் அங்கமான ஐக்கிய அமெரிக்க-இந்தியக் கல்வி அமைப்பின் சார்பில் அமெரிக்க மொழி பேசும் 5 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு ஜப்பானிய மொழிபெயர்ப்பாளரும், ஓர் இந்தோ-பிரென்சு மொழி பேசுபவரும் 03-07-2014 முதல் 30-07-2014 வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆழ்நிலை தமிழ்மொழிப் பயிற்சியை (Intensive Tamil language course) மேற்கொண்டனர். பயிற்சி வகுப்பின் நிறைவு நாளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டு, திருக்குறளின் சிறப்பினைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர். 
 
                அவ்வமயம் திருக்குறள் காட்சிக்கூடத்தில் தமிழரின் வாழ்வியல் நெறிகள் அனைத்து வயதினரும் எளிதில் விளங்கிக்கொள்ளும்வகையில் ஓவிய வடிவில் அமைத்துத் தந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
 
                நிறைவு நாளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வளமையர்களாக அழைக்கப்பட்ட பேராசிரியர்கள் ந. தெய்வசுந்தரம், அ. கோபால், தமிழ்மொழிப் புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார், ஐக்கிய அமெரிக்காவிற்கான இந்திய கல்வி அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி லலிதா நாகேஷ்வரி, தனி அலுவலர் திரு. மார்டின் செல்லத்துரை மற்றும் அலுவலகக் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.