October, 2017    
சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் சிறப்புச் சொற்பொழிவு வரிசை - 2
நிகழ்வு நாள் :
29.10.2014
தலைப்பு : சங்க இலக்கியங்களில் தோலிசைக் கருவிகள்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் மூலம் திங்கள்தோறும் நடத்தப்பெறும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் வரிசை -2 (29.10.2014 காலை 11.00 மணியளவில்) “சங்க இலக்கியங்களில் தோலிசைக் கருவிகள்” என்னும் தலைப்பில் நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. க. பலராமன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இப்பொழிவில் அறிமுக உரையாற்றிய பா. இராசா அவர்கள் சிறப்புச் சொற்பொழிவுக்கான நோக்கங்கள் குறித்தும் அதனுடைய செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். தலைமையுரை ஆற்றிய தனிஅலுவலர் திரு மார்டின் செல்லதுரை அவர்கள் தமிழகப் பெருமையை உலகம் முழுவதிலும் பரப்பும் வகையில் இது போன்ற சிறப்புச் சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்றும், அதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

        பொழிவாளர் திரு. க. பலராமன் அவர்கள் பண்டைத் தமிழர்களின் இசை அறிவு, கையாண்ட இசைக் கருவிகளில் குறிப்பாகத் தோலிசைக் கருவிகள் குறித்துப் படக்காட்சியுடன் சிறப்புரை வழங்கினார்