October, 2017    
உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் நிகழ்வு
நிகழ்வு நாள் :
27.11.2014
தலைப்பு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி மாணவர் கலை இலக்கிய அரங்கு தொடக்கவிழா
   

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் அவர்கள் 27.11.2014ஆம் நாளன்று நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவர் கலை இலக்கிய அரங்கு தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். முதலில் கவிஞர் அவர்களுக்கு உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

                  அயலகத் தமிழர் வாழ்வு
                  அழிவின்றிச் சிறக்கட்டும்
                  ஒயிலாகத் தமிழ் என்றும்
                  உயர்ந்தோங்கித் தழைக்கட்டும்

எனும் வாசகத்தைக் கவிஞர் அவர்கள் வரவேற்பு மையத்தின் பதிவேட்டில் பதிவுச் செய்தார்.

மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றுகையில் தன்னப்பிக்கையினை ஊட்டும் வகையில் தமிழ்ப் படித்தவர்கள் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும். நாம் படிக்கும் தமிழை வைத்து பணம் ஈட்டும் உத்தியினைக் கற்றுக் கொள்ளவேண்டும். மேலும், தன்னுடைய கடந்த கால வரலாற்றினையும் நிகழ்கால சாதனைகளையும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துக்கொண்டார்.


கவிஞர் அவர்கள் 1000த்திற்கும் மேற்பட்ட திரைப் பாடல்களை இயற்றியுள்ளார். இவரின் புகழ்பெற்றப் பாடல்கள் : மீனம்மா மீனம்மா-ராஜாதி ராஜா, திங்கள்தான் தென்றல்தான் - கேளடி கண்மணி, கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே, காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட  - உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன், சோலை பசுங்கிளியே - என் ராசாவின் மனசில, மணிக்குயில் இசைக்குதடி - தங்க மனசுக்காரன், நடந்தால் இரண்டடி – செம்பருத்தி, உயிரே உயிரே, இது தெய்வீக - எல்லாமே என் காதலி, ரசிகா ரசிகா – ஸ்டார், போர்க்களம் இங்கே – தெனாலி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந் நிகழ்விற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பேரா. முனைவர்  கோ. விசயராகவன் அவர்கள் தலைமைத் தாங்கினார். நிறுவனத்தின் சமூகவியல் கலை பண்பாட்டுப் புலத்தின் பேரா. முனைவர் இராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் திரு அ. அமுல்ராஜ் அவர்கள் நன்றியுரை நல்கினார்.