May, 2017    
மலேசிய பினாங்கு ஆசிரியர் கல்விக் கழக மாணவர்களுடன் கலந்துரையாடல்
நிகழ்வு நாள் :
17.12.2014
தலைப்பு : மலேசிய பினாங்கு ஆசிரியர் கல்விக் கழக மாணவர்களுடன் கலந்துரையாடல்
   

மலேசிய பினாங்கு ஆசிரியர் கல்விக் கழக மாணவர்கள் 20 பேர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்து நிறுவனத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தனர்.

        அப்பொழுது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாக மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் செயற்படுத்தப்படும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை கண்டும் கேட்டும் வியப்புற்றனர். திருக்குறள் ஓவியக்காட்சிக் கூடத்தில் வரையப்பட்டுள்ள காட்சிகள் மற்றும் அரிய திருக்குறள் நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்கள், திருக்குறள் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

        மலேசிய பினாங்கு ஆசிரியர் கல்விக் கழக இளநிலை கல்வியல் பட்டதாரி மாணவி பேசுகையில் என்னைப் போன்ற அயலகத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தரும்பொழுது எங்களுக்கு உதவிட உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு அம்மா அவர்களால் அமைத்தது எங்களுக்கு மிகவும் பேரூதவியாக அமைந்துள்ளது.

        மேலும், தொல்காப்பியர் ஆய்விருக்கை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்தியது வெளிநாட்டில் உள்ள எங்களைப் போன்ற மாணவர்கள் தமிழ் மொழியில் ஆராய்ச்சிக்கான வசதிகள் தமிழகத்தில் இனி கிடைக்கும் என்பது உறுதியானது என்றார்.

     உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமையவுள்ள பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் குறித்தான செய்திகளை கட்சியுரைமூலம் நிறுவனப் பேராசிரியர்  முனைவர் ஆ. மணவழகன் அவர்கள் விளக்கம் அளித்தார்.

       வருகை தந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிறுவனம் சார்பில் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்வளர்ச்சி சாதனை நூலும் தமிழியல் என்ற இதழும் வழங்கினார்.

        மேடையில் நிறுவன உதவிப் பேராசிரியர், உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மைய பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம், மலேசிய பினாங்கு  ஆசிரியர் கல்விக் கழக ஆசிரியர்கள் முனைவர் குமாரசாமி, திருமதி தெய்வானை, முனைவர் நாகராசு, முனைவர் சிவபாலன், முனைவர் மணிமாறன் ஆகியோர் உள்ளனர்.