October, 2017    
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : திருக்குறள் முற்றோதல்
நிகழ்வு நாள் :
01.02.2015
தலைப்பு : திருக்குறள் முற்றோதல்
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி தொடக்கவிழா திருவள்ளுவர் ஆண்டு 2046, ஐய வருடம், தை 18 (01.02.2015) ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

முனைவர் து. ஜானகி, உதவிப் பேராசிரியர் (ம) பொறுப்பாளர், திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வரவேற்புரையாற்றினார், முனைவர் கோ. விசயராகவன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தலைமையுரையாற்றினார். முனைவர் பா. இராசா, முனைவர் ஆ. மணவழகன் முன்னிலையில் மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் நாளிதழ் ஆசிரியர் (ம) வெளியீட்டாளர் திரு. இரா. முத்துக்குமார்  அவர்கள் தன்னுடைய தொடக்க உரையில்,  ஆங்கிலத்தைப் போல தமிழ் மூலம் அறிவை வளர்க்கவேண்டும் என்றும், முந்தைய தலைமுறையை விட இன்றைய தலைமுறைக்கு தமிழில் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டார். அதற்கேற்ப தமிழ் மொழி பரவலாக்கப்படவேண்டும்.  தமிழின் உயர்வுக்கு அறிவியல் சாதனைங்களைப் பயன்படுத்தவேண்டும்.  கணினி தட்டச்சு செய்யும்போது எழுத்துப்பதிவு ஆங்கிலத்தைப்போல தமிழில் இருந்தால் பயனுடையதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இதனால் அறிவியல்  தமிழை வளர்ப்பதற்கு தமிழ் மக்கள் முதல்வர்  மாண்புமிகு அம்மா அவர்கள்  செய்துள்ள பணி மிகவும் போற்றுதற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளின் திருக்குறள் முற்றோதல் ஒப்பிப்பதுபோல் இல்லாமல் அதன் பொருளை உணரச்செய்யவேண்டும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்  தமிழை மேலும் உலகளவில்  பரப்ப வழிசெய்யவேண்டும் என்று தன்னுடைய சிறப்புரையில் குறிப்பிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் திரு. பா. கிருஷ்ணன்  அவர்கள் குழந்தைகள் அன்பைத் தாயிடமும் அறிவைத் தந்தையிடமும் பெற்றால் நல்ல பேரை வாங்க முடியும் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்  ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.  அதுபோல இன்றைய தலைமுறை  அறிவை வளர்க்க வேண்டும். அவர்கள் திருக்குறள் முற்றோதல் அறிவை மேம்படுத்த பெரிதும் துணையாக அமையும். குடும்பம்தான் நல்ல அன்பையும்  திருக்குறள் அறிவையும் வளர்க்கும். என்று கூறினார்.

தமிழ்த்தாய் அறக்கட்டளை, சிறப்புத் தலைவர், கவிமாமணி துரை. இராசமாணிக்கம், திருக்குறள் பேரவை சிறப்புத் தலைவர், பாவலர் ப.கோ.நாராயணசாமி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திருக்குறள் கவனகர் இரா. எல்லப்பன் ஒருங்கிணைப்பில் 1330 திருக்குறள் முற்றோதல் தேர்ச்சிபெற்ற மாணவர்களின் திருக்குறள் முழக்கொலி நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் ஆ. மணவழகன் நன்றி  நவின்றார்.