April, 2017    
திரு சி.மா.துரை அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
02.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "பழந்தமிழரின் அரங்க ஆட்டம்"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி திருவள்ளுவர் ஆண்டு 2046, ஜய வருடம், தை 19 (02.02.2015) திங்கட்கிழமை, இரண்டாம் நாள் நிகழ்வு பிற்பகல் 3.00 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார் முனைவர் பா.இராசா அவர்கள் முன்னிலையில் சீ.மா.துரையரசு அறக்கட்டளை சார்பில் "பழந்தமிழரின் அரங்க ஆட்டம்" எனும் தலைப்பில் சென்னை-15, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், திரைப்படம் மற்றும் அரங்கியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சி.கார்த்திகேயன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தனி அலுவலர் திரு. தா.மார்டின் செல்லதுரை அவர்கள் நன்றி நவின்றார்.