March, 2017    
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
03.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "குடும்ப வாழ்வியல் வேதாத்திரியின் கோட்பாடுகள்"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை இன்று 03.02.2015  செவ்வாய்க்கிழமை,  முற்பகல் 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்று வருகிறது.

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார் முனைவர் தி.மகாலட்சுமி அவர்கள் முன்னிலையில் வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை சார்பில் "குடும்ப வாழ்வியல் வேதாத்திரியின் கோட்பாடுகள்" எனும் தலைப்பில் முனைவர் ச.மல்லிகா அவர்கள் சொற்பொழிவாற்றினார் அவர்தம் சொற்பொழிவில்: உலக நலனுக்கும் அமைதிக்கும் தனிமனித நலனும் அமைதியும் அவசியம் என்பதை உணர்ந்தவர் வேதாத்திரி அவர்கள். தன் வாழ்வில் பல ஆண்டுகால அனுபவத்தில் தான் உணர்ந்த்தை மக்களுக்கு உணர்த்தியவர். குடும்ப வாழ்க்கை, குடும்பக் கட்டமைப்பு, குடும்பத்திற்குரிய பொதுவான கோட்பாடுகள், குடும்ப அமைதி, குடும்ப அறம், குடும்ச் சிக்கல்களுக்கான தீர்வுக் கோட்பாடுகள், குழந்தை வளர்ப்பு, இல்லறம், குண்டலினி யோகம் என்பனவற்றின் வழி மக்களுக்கு மகரிசி வழிகிட்டிய பயன்கள் பொழிவில் எடுத்துரைக்கப்பட்டன. பிறகு செற்பொழிவு நூலாக வெளியிடப்பட்டது. முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட முனைவர் வி.இரா.பவித்ரா நூலினைப் பெற்றுக்கொண்டார். ஆய்வியல் நிறைஞர் மாணவர் மு.பிரபா  அவர்கள் நன்றி கூறினார்.

படச்செய்தி: தமிழ்த்தாய் - 67 பெருவிழாவில் வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை சார்பில் "குடும்ப வாழ்வியல் வேதாத்திரியின் கோட்பாடுகள்" மற்றும் நூல் வெளியீடு:  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர் நூல் வெளியிட முனைவர் வி.இரா.பவித்ரா அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன்  பொழிவாளர் முனைவர் ச.மல்லிகா, வேதாத்திரி மகரிஷி அறங்காவலர் ச.ஞானசம்பந்தம் அவர்கள்.