May, 2017    
தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
03.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "மலேசியத் தமிழ்க் கல்வி வரலாறு"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை இன்று 03.02.2015  செவ்வாய்க்கிழமை,  பிற்பகல் 2.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.  

மூன்றாம் நாள் மூன்றாம் நிகழ்வாக முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் முன்னிலையில் தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை சார்பில்  "மலேசியத் தமிழ்க் கல்வி வரலாறு" எனும் தலைப்பில் மலேசியா, சுல்தான் இட்ரீஸ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முனைவர் ஜெ.சாமிக்கண்ணு மற்றும் முனைவர் பா.த.கிங்ஸ்டன் ஆகியோர் சொற்பொழிவாற்றினார். முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட  முனைவர் பெ.செல்வகுமார் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.