August, 2017    
மறைமலை அடிகளார் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
04.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "மறைமலை அடிகளாரின் தமிழ்ப்பணி"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  நான்காம் இன்று 04.02.2015  புதன்கிழமை,  முற்பகல் 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.  

நான்காம் நாள் முதல் நிகழ்வாக முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் முனைவர் பா.இராசா அவர்கள் முன்னிலையில் மறைமலையடிகளார் அறக்கட்டளை   சார்பில்  "மறைமலை அடிகளாரின் தமிழ்ப்பணி" எனும் தலைப்பில் இராணிமேரி கல்லூரி, தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர் முனைவர் இர.சிவசக்தி அவர்கள் சொற்பொழிவாற்றினார். நிறுவனத்தின் முனைவர்பட்ட ஆய்வாளர் திரு.இ.விஜய் அவர்கள் நன்றி கூறினார்.