May, 2017    
அயல்நாட்டுத் தமிழர் புலம் பயிலரங்கத் தொடக்க விழா
நிகழ்வு நாள் :
05.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "சங்க இலக்கியத் தகவல் தொடர்பில் மொழியும் பண்பாடும்"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  ஐந்தாம் நாள் நிகழ்வாக இன்று 05.02.2015  வியாழன் கிழமை,  முற்பகல் 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் “சங்க இலக்கியத் தகவல் தொடர்பில் மொழியும் பண்பாடும்” எனும் தலைப்பில் பத்து நாள் (05.02.2014 முதல் 14.02.2014 வரை) பயிலரங்கத் தொடக்க விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றுவருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார் அயல்நாட்டுத் தமிழர் புலம், உதவிப் பேராசிரியர், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் து.ஜானகி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மேனாள் இணை இயக்குநர் பேராசிரியர் பொன்.சுப்பையா, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம், புலத் தலைவர், பேராசிரியர் வீ.ரேணுகாதேவி, சென்னைப் பல்கலைக்கழகம், இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர், பேராசிரியர் கோ.இரவீந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

தொடர்ந்து நடைப்பெற்ற பயிலரங்கத் தொடக்க விழாவில் பேராசிரியர் கோ.இரவீந்திரன் அவர்கள் சமகாலப் பார்வையில் சங்க இலக்கியத் தகவல் தொடர்பியல் எனும் தலைப்பிலும் பேராசிரியர் முனைவர் க.பசும்பொன் அவர்கள் நற்றிணையில் கருத்துப்பரிமாற்றம் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர புலம், உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் நன்றி கூறினார்.