November, 2017
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : அரிய நூல்களின் 2 இலட்சம் பக்கங்கள் மின் எண்மம் (Digitization) பதிவேற்றம்
நிகழ்வு நாள் :
26.02.2015
தலைப்பு : அரிய நூல்களின் 2 இலட்சம் பக்கங்கள் மின் எண்மம் (Digitization) பதிவேற்றம்
   

படச்செய்தி: மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் 2 இலட்சம் பக்கங்கள் மின் எண்மம் (Digitization) பதிவேற்றத்தை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தளத்தில்  www.ulakaththamizh.org தொடங்கி வைத்தார்கள். தமிழ் வளர்ச்சி மற்றும் அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம், இஆப, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் உடனிருந்தனர்.

                மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரி 28 நாட்களும் பல்வேறு சொற்பொழிவுகள், பன்னாட்டுக் கருத்தரங்குகள், தேசியக் கருத்தரங்குகள் 171 அரிய நூல்கள் வெளியீடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன அவ்வரிசையில் அரிய நூல்கள் மின் எண்மம் பதிவேற்றம் செய்தல் எனும் நிகழ்ச்சி, 26.02.2015 வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா அவர்களால் அறிவிக்கப்பெற்றுத் தோற்றுவிக்கப் பெற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகம் ஓர் இலட்சத்துக்கும் மேல் நூல்களைக் கொண்டு தமிழ் ஆய்வாளர்களுக்குப் பயன்பட்டு வருகிறது. தேடக்கிடைக்காத நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையும் இலக்கியத்தரமும் வாய்ந்த அரிய நூல்கள் பல இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பெற்று வருகின்றன.  

                இவற்றின் பயனைப் பொதுமக்களும் பெறவேண்டுமென்ற நோக்கத்தில், மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ.10 இலட்சம் நிதி ஒதுக்கி மின் எண்மம் (னுபைவைணையவiடிn)  செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய ஆணையிட்டுள்ளார்கள்.

அதன்படி இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் மின் எண்மம் (னுபைவைணையவiடிn) செய்யப்பெற்று, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப. தலைமையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான திரு.கே.சி.வீரமணி அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலிருந்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தனது சிறப்புரையில்

உள்ளத்து உள்ளிருந்து……….

                உணர்வுகளைத் தானெழுப்பி……….

                நெஞ்சமதில் நீதி வைத்து……

                நேர்மையாகத் தான் வாழ…….

                சொல்லில் வருவதே…… அறிவு…….என்பதால்

                "அறிவு அற்றம் காக்கும் கருவி" 

                ஆம்……… 

                அறிவு……அழிவு வராமல் காக்கும் கருவி மட்டுமல்லாமல்

                பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்

                அழிக்க முடியாத உள் அரணும் ஆகும்.

என்பதால் ,

                எங்கள் அறிவுக்கும் அறிவு சார்ந்த இயக்கத்திற்கும், என்றும், நாங்கள் போற்றும்  இதயதெய்வம் மாண்புமிகு மக்களின் முதல்வர்  புரட்சித்தலைவி  அம்மா அவர்களே காரணகர்த்தா ஆவர்.

 

மக்களுக்குத் தொண்டு செய்து மகேசன் என வாழும்…..

மாண்புமிகு மக்கள் முதல்வர் எங்கள் அம்மா!

ஏழை என்னும் சொல்

                மேதினியில் எங்கும் இல்லாம்  நீங்கிடவே

                ஏற்றம் பல அவர்களுக்கு ஈந்து

                எதிலும்  அவர் வாழ்க்கை தழைத்தோங்க

                எண்ணற்றத் திட்டங்கள் தந்து

                தமிழ்நாட்டுக்கு அருள்பவர்தான்

                மாண்புமிகு மக்கள் முதல்வர் எங்கள் அம்மா.

                அதனால்……..

                "அல்லல் - அருள் ஆள்வார்க்கு இல்லை"   

என்ற குறள் நெறிப்பட அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம்

என்றும் இல்லை என்பதால்

மாண்புமிகு மக்களின் முதல்வர்  எங்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவிற்கு துன்பம் என்பது  என்றைக்கும் ஏற்படாது... என்று வான்மறை கண்ட தெய்வப் புலவர் வள்ளுவரே  சொல்லுகிறார்.

 "பயிற்றுப் பல கல்வி தந்து….இந்தப்

   பாரை உயர்த்திட வேண்டும்"

"அன்னயாவினும்

   புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

என்றார் பாரதி

"மலைவாழை அல்லவோ கல்வி"

என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.

இக்கல்வியை பாமரனும் படைப்பவனும் சமமாய் பெற்றிடவே,

சமச்சீர்கல்வி  கொணர்ந்தார் நம் அம்மா.

ஏற்றத்தாழ்வு  ஒழிந்து  மாற்றம் பெற்றது தமிழ்நாடு.

ஆற்றல் மிக்கவர்களாக  மாறுகின்றனர் மாணவர்கள்.

இன்றைய நிலையை மட்டும் யோசிக்காமல்

நாளைய தலைமுறையின் நிலையையும் எண்ணி

காத்துவரும்  தலைவிதான்   மாண்புமிகு மக்களின் முதல்வர்

நம் அம்மா ஆவர்.  

நீ ஒருவனுக்கத் தரும் மீன் துண்டு

அவனுக்கு அன்றைய  பொழுதுக்கு உணவு

மீன் பிடிக்கவே கற்றுக்கொடுத்துவிட்டால்

நீ அவனுக்கு  வாழ்நாள் முழுவதும்

உணவளித்தவனாவாய்……."

எனும் சீன நாட்டின் பழமொழிக்கேற்ப...  தமிழ்நாட்டிற்கு ஆதாரக்கல்வியாய்  சமச்சீர் கல்வியை  மாற்றி மாணவச் செல்வங்களை தன் நம்பிக்கை உள்ளவர்களாக  ஆக்கியத் தலைவி மாண்புமிகு  மக்கள் முதல்வர் நம் அம்மா ஆவார்.    

                "ஒரு நாட்டின் இளைஞர்கள் அந்நாட்டின் நாளைய வழிகாட்டி" என்றார் விவேகானந்தர்.

அந்த இளைஞர்களின் "இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்" என்கிறது நான்மணிக்கடிகை, இளமையில் கல்வி கற்காமல் இருப்பது பெரும் குற்றமாகும் என்பதால்,தாய்த்திருநாட்டு இளைஞர்களின் வாழ்க்கைக்கு மழலையர் வகுப்பு முதல்    கல்லூரிக்  கல்வி வரை அவர்களுக்கு குடும்ப சுமை தெரியாத அளவிற்கு அவர்கள்  கல்விச்சாலையில் தங்கு தடையின்றி பயணிக்க அனைத்தும் விலையில்லாமல் தந்து அவர்களுக்கு அறிவு ஒளி  ஏற்றுவதை  இலட்சியமாகக் கருதி வாழ்ந்து வருபவர் மாண்புமிகு மக்களின் முதல்வர் நமது அம்மா ஆவர்…

இதனால் தேசிய அளவில் தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சிக் குறியீடு முதனிலை நோக்கி விரைந்துள்ளது என்றால்….இதற்குக் காரணம் மாண்புமிகு மக்களின் முதல்வர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டின் கல்வியில் அளப்பரிய புரட்சிசெய்த புரட்சித் தலைவி அம்மா

தமிழ் வளர்ச்சியில் சாதனைகளைப் பல புரிந்து வருகிறார்.

                                "சலுகைகள் இல்லையே என்றும்"

                                 "தமிழ் அழிந்திடுதே என்று…"

  பாவேந்தர் பாரதிதாசன் ஆதங்கப்பட்டார்.                                                                 

                ஆனால் இன்று தமிழ் வளர்ச்சிக்குத் திட்டங்கள்.

 வரிசையாக வரலாறு பேசுகிறது. அம்மாவின்  பெருமையை…

                                "வரப்பு உயர நீர் உயரும்" என்றார் ஔவை.

ஆம்.. தமிழுக்குத் தொண்டு செய்பவர்கள்தான் தமிழ் வளர்ச்சிக்கு  வரப்புகள் ஆவர். அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் வாட்டத்தைப் போக்கிடவே காலங்காலமாக இருந்துவந்தஅகவை முதிர்ந்த தமிழறிஞர் நிதியுதவியை ரூ.2000/- ஆக உயர்த்தியவர் அம்மா.  இதனால் அறிஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் நம் அம்மா.  அதுமட்டுமல்லாமல்.. நிதியுதவி பெற  தடையாகயிருந்த  ஆண்டு வருமானம்   ரூ.12,000/- என்பதை ரூ. 24,000/-ஆக உயர்த்தி ஆணையிட்டவர் நம் அம்மா.

இதுமட்டுமல்ல, இன்று தமிழ்நாடெங்கும் இவர்கள் பயணம் சென்று அன்னைத் தமிழ் வளர்க்க இலவச பேருந்து பயண அட்டை தந்தவர் மாண்புமிகு அம்மா.

                இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ், மாண்புமிகு அம்மாவின் ஆணையால் அறிவியலை  உள்ளடக்கி நான்காம் தமிழாக நம் தாய்மொழி இன்று மிளிர்கிறது.  இதை உறுதிப்படுத்திடும்வண்ணம் ஆண்டுதோறும் புதிய தமிழ்க் கணினி மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் உருவாக்கிட ஆணையிட்டவர் நம் மாண்புமிகு அம்மா.

                தன்னைச் சுற்றிவரும் துதிபாடிகளுக்கும்…  ‘கோரசு கோஷ்டிகளுக்கும்’ தமிழறிஞர் விருதுகளை வழங்கியவர்கள் இருந்த நாட்டில்…

இன்று விருதுகள் தமிழறிஞர்களுக்கு; விண்ணப்பித்தவர்களுக்கும், விண்ணப்பிக்காதவர்களுக்கும் அவர் தம்  தமிழ்த் தொண்டினை அறிந்து தாயுள்ளத்தோடு விருதும் தங்கப்பதக்கமும் பண முடிப்பும் தந்து பாராட்டி மகிழ்பவர்தான் நம் மாண்புமிகு அம்மா.

                இன்று தமிழறிஞர்களுக்கான விருதுகள் ஆண்டுக்கு ஆண்டு கூடுகிறது. இதனால் தமிழறிஞர்கள் மனங்கள் எல்லாம் அம்மாவின் தமிழ்ப் பணிக்கு நன்றி  பாராட்டி வாழ்த்துகின்றன.

                மூன்றாம் முறையாக இன்றும் என்றும் தமிழ் மக்களின் பேரரசியாக வளர்ந்துவரும் நம் மாண்புமிகு அம்மா அவர்களின் இக்கால ஆட்சியில் கபிலர் விருது, கம்பர் விருது, உ.வே.சா விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஔவையார் விருது, இளங்கோவடிகள் விருது, முதலமைச்சர்  கணினித்தமிழ் விருது, மற்றும் மாவட்டந்தோறும் தமிழ் அமைப்பு வைத்து தமிழ்த்தொண்டு ஆற்றுபவருக்கு ஒரு ‘தமிழ்ச் செம்மல்’ விருது. தலா ரூ. 25,000/- என அறிவித்துள்ளார் நம் புரட்சித்தலைவி அம்மா.

கற்றோர், சான்றோர், புலவர்கள், தாய்மார்கள், மாணவச் செல்வங்கள், பத்திரிக்கையாளார்கள், ஊடக நண்பர்கள், இசைக் கலைஞர்கள் எல்லாம்  நிரம்பியிருக்கின்ற இந்த அவையில் கூறுகிறேன்.

நாடு விடுதலையடைந்து 1956-நவம்பர் முதல்நாள் தமிழ்நாடு தனி மாநிலமாகி 59 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 59 ஆண்டுகளின் வரலாற்றில் தமிழறிஞர்களுக்கு 41 விருதுகளை வழங்கி பெருமைபடுத்திய ஒரே ஆட்சி - மாட்சிமைமிக்க உலகத்தமிழர்களின் தலைவி ஆட்சியில். கடந்த ஆண்டுகளில் இதுவரை 5 விருதுகளே வழங்கப்பெற்றிருந்தன. ஆனால் அம்மா அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 41 விருதுகளாக உயர்த்தியுள்ளார். மாண்புமிகு மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மட்டுமே என்பதை பதிவுசெய்கிறேன்.

அது மட்டுமா?  திருவள்ளுவரையும், சி.சுப்பிரமணிய பாரதியாரையும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் சீன மொழிக்கும் அரபு மொழிக்கும் கொண்டு சென்றவர் நம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். 1330 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களிள் ஆண்டுதோறும் 30 பேரைத்  தெரிவுசெய்து ரூ.10,000/- வழங்கப்படுகிறது. இளந்தமிழர் இலக்கியப் பட்டறையால் இளைஞர்களை தமிழ் உணர்வாளர்களாக மாற்றிட ரூ.20 இலட்சம் அளிக்கப்படுகிறது. சிறந்த நூல் பரிசளிப்புத் திட்டத்தில்   மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் வகைப்பாடு சேர்ப்பு,  சிறந்த நூல் வெளியிட  நிதியுதவி

ரூ. 25,000/- என்பது ரூ. 50,000 ஆக உயர்த்தப்பெற்றது.

பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தித் தமிழில் படைப்பாற்றலை உருவாக்கி ஆண்டுதோறும்  ரூ. 50/- இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார் புரட்சித்தலைவி மக்கள் முதல்வர் அம்மா அவர்கள்.

தமிழ் தாத்தா உ.வே.சா, திருவுருவச் சிலைக்கு மலர்தூவி சிறப்பு செய்தல் இன்றைய இளைஞர்களுக்குத்  தமிழர் வாழ்வியலைக் காணச்செய்திட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ரூ. 3.46 கோடி செலவில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தையும், திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தையும் உருவாக்கியுள்ளார் நம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ப புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கிட சொல்வங்கி திட்டத்தைத் உருவாக்கியவர் நம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா.

உலகத்திலுள்ள தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் ஒரு குடையின்கீழ் ஒன்றிணைக்க மதுரையில் மீண்டும் புதுப்பொலிவுடன் "உலகத் தமிழ்ச் சங்கம்" ஒன்றினை அமைத்துள்ளார்  நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

தமிழறிஞர் டாக்டர் கால்டுவெல் அவர்களின் திருவுருவச் சிலைக்கு  ஆண்டுதோறும் மாலை அணிவித்திட ஆணையிட்டுள்ளவர் நம் புரட்சித்தலைவி    அம்மா அவர்கள்.

சித்திரைத் திங்கள் முதல்நாள் தான் மரபுப்படி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு நாள் என 23.08.2011 அன்று மாண்புமிகு அம்மா அவர்களால் சட்டம் இயற்றப்பட்டது. தமிழர்களின்  அதன்படியே அந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

                உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தவத்திரு தனிநாயகஅடிகளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட ஆணையிட்டவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா.

ஆந்திரா, கேரளா, மும்பை போன்ற பிற மாநிலங்களில் தமிழ் வளர்ச்சிக்க நிதியுதவி வழங்கியுள்ளார்  நம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா.

தில்லித்தமிழ்ச் சங்கத்திற்குத் தோரண வாயில் கட்ட நிதிஉதவியாக ரூ. 25.00 இலட்சம்  வழங்கியுள்ளார்  நம் புரட்சித் தலைவி மக்களின் முதல்வர் அம்மா.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்புக்கு  மூன்றாண்டுகளுக்கு ரூ. 30  கோடியும், கணினி வழித்தமிழ் வளர்ச்சித் திட்டம் நிறைவேற்ற செயற்படவும்  தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு  ரூ.12 இலட்சமும் ஒதுக்கீடுசெய்துள்ளார் நம் புரட்சித்தலைவி அம்மா.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுக்காக்க, ஓலைச்சுவடி பாதுகாப்பு மையம் ஒன்று அமைத்திட ரூ. 34 இலட்சமும் வழங்கியுள்ளார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.               

நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் உள்ள அரிய நூல்களை  மின் எண்மத்தில் பதிவு செய்த ரூ. 10 இலட்சமும் ஒதுக்கியுள்ளார் புரட்சித்தலைவி  மக்கள் முதல்வர் அம்மா.             

அயல்நாட்டவர்க்குத் தமிழ் கற்பித்திட மொழியியல் ஆய்வுக்கூடம் அமைத்திட ரூ. 24 இலட்சமும் ஒதுக்கியுள்ளார்  நம் மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா.

அரிய தமிழ் நூல்கள்

                மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அரியவகை தமிழ் நூல்களை தேடிக் கண்டுபிடிப்பதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு முயற்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சமர சன்மார்க நூலகத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் தலைமையில் அரிய நூல்கள் குறித்து தேடும் பணி நடைபெற்றது.

தேடக்கிடைக்காத நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையும் இலக்கியத்தரமும் வாய்ந்த அரிய நூல்கள் பல இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பெற்று வருகின்றன.

சிவபிரகாச சுவாமிகளின் நன்னெறி பதவுரை (கி.பி.1871), ஜெயமுனி சூத்திரம் (கி.பி.1892), அமிர்தம் பிள்ளையின் யாப்பிலக்கண விளக்கம் (கி.பி.1876), கோ.பள்ளி கொண்டானின் பிரபந்தத் திரட்டு (கி.பி.1897), அதிவீரராம பாண்டியனின் நைடதம் (கி.பி.1878), பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப்புலவர் சரித்திரம் (கி.பி.1899), சபாபதி நாவலரின் திராவிடப் பிராகசிகை (கி.பி.1899), இராஜகோபாலப் பிள்ளையின் திரிகடுகம், பாரதவெண்பா, பஞ்சதந்திரம் (கி.பி.1870), குப்புசாமி நாயுடுவின் ஆரூடசாத்திரம் (கி.பி.1896), ஏகாம்பர முதலியாரின் விஷ்ணு நாமாவளிகள் (கி.பி.1895) போன்றவை இவ்வரிய நூல்கள் ஆகும்.

 அதன்படி இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் மின் எண்மம் (Digitization) செய்யப்பெற்று பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 

தமிழையும், தமிழ் இனத்தையும் இரு கண்களாக எண்ணி உலகமே வியக்கும்  வண்ணம் தமிழ்நாட்டைக் காத்து, வளர்த்து வரும் மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் தலைமையில் """"எங்கள் திருநாட்டில் எங்கள் அம்மா அவர்களின் நல் ஆட்சியே! """"  என்று கூறுவோம். புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையை ஏற்று என்றும்  வாழ்ந்திடுவோம்! என்றார்.

2 இலட்சம் மின்எண்மம் பக்கங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணையத் தளத்தில் www.ulakaththamizh.org காணலாம்.

முன்னதாக மாண்புமிகு அமைச்சர் அவர்களும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் அவர்களும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சேகரிக்கப் பெற்றுள்ள ஓலைச்சுவடிகளையும் அவற்றிற்கு மருந்து தெளித்துப் பாதுகாப்பதையும் மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிமுடிக்கப்படும் நிலையில் உள்ள புதிய கட்டடத்தில் உள்ள அயல்நாட்டினருக்கு தமிழ் பயிற்றுவிக்கக்கூடிய மொழியியல் கூடத்தின் கட்டமைப்பையும் பார்வையிட்டார்.