April, 2019
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : தமிழர் – கலை, பண்பாடு-பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா
நிகழ்வு நாள் :
26.02.2015
தலைப்பு : தமிழர் – கலை, பண்பாடு-பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா
   

தொடக்கவிழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம், இஆப அவர்கள் தமது உரையில்,

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கோடிக்கணக்கான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருவதை நாடறியும். குறிப்பாக, தமிழ் வளர்ச்சிக்கு இக்காலம் பொற்காலம். தமிழறிஞர்களுக்கு விருதுகள், நிதியுதவிகள், பாராட்டு விழாக்கள் எனவும், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தினை மீட்டெடுக்கப் பலகோடி ரூபாய் ஒதுக்கீடு, மீண்டும் புதுப்பொலிவுடன் மதுரை, உலகத்தமிழ்ச்சங்கம், அண்டை மாநிலத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்குத் தமிழ் வளர்க்க நிதியுதவி எனப் பல்வேறு தமிழ்வளர்ச்சித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய நாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும். கடந்த 24ஆம் தேதி மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் 171 அரிய மற்றும் புதிய நூல்கள் வெளியிட்டு, பழந்தமிழர் பெருமைகளை, வரலாறுகளை, இலக்கியங்களை சிதைந்த நிலையிலிருந்து மீட்டுருவாக்கம் செய்து நூலாக்கம் பெற்றதால் மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் தமிழ்ப்பணி உலகெங்கும் பரவிடச்செய்யப்பெற்றன.

அதன் வரிசையில் இன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் நூற்றாண்டு கால அரிய நூல்களைத் தேடிக்கண்டுபிடித்து அரிய நூல்களை இன்று மின் எண்மம் செய்து வலைதளத்தில் ஏற்றம் செய்யும் நிகழ்வு தமிழ்வளர்ச்சியில் ஒரு மைல்கல் ஆகும். வருங்கால, நிகழ்கால ஆய்வறிஞர்களின் தமிழியல் ஆய்வுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஊரெல்லாம் தேடிக் கண்டுபிடித்து ஆய்வு நிகழ்துவதைவிட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வலைதலத்தில் நூல்களையெல்லாம் பார்த்தால் படித்தால் மட்டுமே போதும் - பழங்கால தமிழிலக்கிய செல்வங்களை உங்கள் வீட்டிலேயே கொண்டுவந்து இணையதளத்தின் வாயிலாகச் சேர்த்த பெருமை மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களாகும்.

மேலும்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு   அம்மா அவர்கள் தமிழுக்கு செய்துள்ள பணிகள்: நிதியுதவிகள் 2011-2012 ஆம் ஆண்டு  - ரூ.54.54 இலட்சமும், 2012-2013 ஆம் ஆண்டு  - ரூ. 23.00 இலட்சமும், 2013-2014 ஆம் ஆண்டு - ரூ. 72.30 இலட்சமும், 2012-2013 ஆம் ஆண்டு  - ரூ. 436.04 இலட்சமும், புதிய அலுவலகக் கட்டடம் கட்ட வழங்கப்பட்ட - ரூ.    417.00 இலட்சமும், நூலக ஆணை பெறப்பட்ட தொகை - ரூ. 106.31 இலட்சமும் கடந்த நான்கு ஆண்டுகளில் நிறுவனத்தின் மூலம் தமிழ்வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்கிய மொத்த தொகை  -

ரூ. 1109.19 இலட்சமாகும். இது உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வரலாற்றில் பொற்காலம் ஆகும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஆண்டுகளில் 25 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவர் தமிழ் மொழி கற்றுள்ளனர்.  இவர்களைப்போன்று பல அயல்நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் தமிழ் படிப்பதற்கு ஏற்றவகையில் மக்களின் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி இங்கே மொழியியல் ஆய்வுக்கூடம் தொடங்கப்பெற்றுள்ளது. இதை அயல்நாட்டு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

                உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஆண்டு  தமிழ் மொழி கற்ற அயல்நாட்டினர் 38 பேர். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றோர் 175 பேர். முனைவர் பட்டம் பெற்றோர் 123 பேர். சுவடியியல் பட்டயம் படிப்போர் 45 பேர். திருமந்திரமும் வாழ்வியல் பட்டயம் படிப்போர் 95 பேர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உயர் ஆய்வு நிறுவனமாதலால் அதன் பல்துறை (multi disciplinary) ஆய்வுப்பணிகளுக்குத் தொடக்கக்கால ஆய்வின் தன்மைகளை (before Independent) அறிந்து இதற்கேற்ப ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு இவ்வரிய நூல்கள் பயன்படும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இவ்வரிய நூல்கள் தேவையாக உள்ளன. பழந்தமிழர் அறிவின் வெளிப்பாடுகளே இவ்வரிய நூல்கள். எனவே இவற்றை பதிப்பித்து வெளியிடுவத சிறந்த செயல் ஆதலால் இச்செயலைச் செய்து வருகின்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.