August, 2017    
அயல்நாட்டுத் தமிழர் புலம் பயிலரங்கம்
நிகழ்வு நாள் :
09.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "சங்க இலக்கியத் தகவல் தொடர்பில் மொழியும் பண்பாடும்"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  ஒன்பதாம் நாள் நிகழ்வாக இன்று 09.02.2015  திங்கள் கிழமை,  முற்பகல் 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் “சங்க இலக்கியத் தகவல் தொடர்பில் மொழியும் பண்பாடும்” எனும் தலைப்பில் ஐந்தாம் நாள் பயிலரங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றுவருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார் அயல்நாட்டுத் தமிழர் புலம், உதவிப் பேராசிரியர், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் து.ஜானகி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

முனைவர் மு.கற்பகம் அவர்கள் “குறிஞ்சிப்பாட்டில் தகவல் தொடர்புக் கூறுகளும் மொழிச் செயல்பாடும்” எனும் தலைப்பில்   சொற்பொழிவாற்றினார்கள். முனைவர் அ. சதீசு அவர்கள் நன்றி கூறினார்.