April, 2017    
அயல்நாட்டுத் தமிழர் புலம் பத்தாம் நாள் பயிலரங்க நிறைவு விழா
நிகழ்வு நாள் :
14.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "சங்க இலக்கியத் தகவல் தொடர்பில் மொழியும் பண்பாடும்"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  14-ஆம் நாள் நிகழ்வாக இன்று 14.02.2015  சனிக் கிழமை,  முற்பகல் 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் “சங்க இலக்கியத்தில் தகவல் தொடர்புக் கூறுகளும் மொழிச் செயல்பாடுகளும்” எனும் தலைப்பில் பத்தாம் நாள் பயிலரங்க நிறைவு விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார் அயல்நாட்டுத் தமிழர் புலம், உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மொழியியல் உயராய்வு மையம், மேனாள் இயக்குநர் பேராசிரியர் மா.கணேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார், முனைவர் ப.டேசிட் பிரபாகர் அவர்கள் “சங்க இலக்கியங்களில் மொழிச் செயல்பாடுகளும் கருத்துப்புலப்பாடும்” எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அயல்நாட்டுத் தமிழர் புலம், உதவிப் பேராசிரியர், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் து.ஜானகி அவர்கள் நன்றி கூறினார்.