October, 2017    
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : அரிய நூல்களை எண்மயமாக்கும் பணி
நிகழ்வு நாள் :
16.02.2015
தலைப்பு : அரிய நூல்களை எண்மயமாக்கும் பணி
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 2014-2015 ஆம் சட்டமன்ற மானியக்கோரிக்கை அறிவிப்பில் அறிவித்த திட்டமான அரிய நூல்களை எண்மயமாக்கும் பணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மிக வேகமாக நடைபெற்றுவருகிறது. இன்று 16.02.2015 அரிய நூல்களை எண்மயமாக்கும் பணியிணை உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் செம்பதிப்பு அறிஞர்குழுவினர்களான பேராசிரியர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம், பேராசிரியர் முனைவர் ம.பெ.சீனிவாசன், பேராசிரியர் முனைவர் சு.வேங்கடராமன், பேராசிரியர் முனைவர் கே.சிவகுமார், பேராசிரியர் முனைவர் சா.வளவன் ஆகியோர்களிடம் விளக்கிக் கூறினார். பேராசிரியர் முனைவர் பா.இராசா, நூலகர் திரு.பெருமாள்சாமி உடனிருந்தனர்.

எண்மயப்பணியினை பார்வையிட்ட “அறிஞர்கள் அழிந்துவரும் பல நூற்றாண்டு கால அரியநூல்களை மின்எண்மம் செய்தும், புதிய நூலாக வெளியிட்டும் பாதுகாத்து, தமிழ்மக்களுக்கு அர்ப்பணிக்கும் மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு இது ஒரு மணிமகுடம்” என்று வியந்துப் பாராட்டினர்.