June, 2017    
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : இருநாள் தேசிய கருத்தரங்கம்
நிகழ்வு நாள் :
17.02.2015
தலைப்பு : "இந்திய இலக்கண மரபுகளும் தொல்காப்பியமும்"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்  "தமிழ்த்தாய் 67 - பெருவிழா", தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  17ஆம் நாளான இன்று 17.02.2015  செவ்வாய்க்கிழமை,  முற்பகல் 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் 2013ஆம் ஆண்டு  ரூ.50 இலட்சம் வைப்புத் தொகை வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொல்காப்பியர் ஆய்விருக்கையின் சார்பில் "இந்திய இலக்கண மரபுகளும் தொல்காப்பியமும்" இருநாள் தேசிய கருத்தரங்க தொடக்கவிழா  "தமிழியலில் தொல்காப்பியம்" எனும் தலைப்பில் நூல் வெளியிடப்பெற்றது.

விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமைதாங்கினார் தொல்காப்பியர் ஆய்விருக்கை பொறுப்பாளர், முனைவர் அ.சதீஷ் அவர்கள் நோக்கவுரையாற்றினார் திரு.க.அறிவுக்கரசு அவர்கள் வரவேற்றார். மொழி அறக்கட்டளை, திட்ட இயக்குநர், பேராசிரியர் பா.ரா.சுப்ரமணியம் அவர்களும், பேராசிரியர் எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்களும் சொற்பொழிவாற்றினர். முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட  பேராசிரியர் கோ.வேணுகோபால் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார் திரு.ச.பிரபாகரன் அவர்கள் நன்றி கூறினார்.