May, 2017    
ஈ.வெ.ரா மணியம்மை அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
20.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : "தந்தை பெரியாரும் வான்புகழ் வள்ளுவனும்"
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்  "தமிழ்த்தாய் 67 - பெருவிழா", தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  20ஆம் நாளான இன்று 20.02.2015  வெள்ளிக் கிழமை,  முற்பகல் 11.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமைதாங்கினார், முனைவர் கா.காமராஜ் அவர்கள் முன்னிலை ஈ.வே.ரா.மணியம்மை அறக்கட்டளை  சார்பில் செஞ்சி, உலகத் திருக்குறள் பேரவை, முனைவர் நயம்பு. அறிவுடைநம்பி அவர்களின் "தந்தை பெரியாரும் வான்புகழ் வள்ளுவனும்" எனும் தலைப்பில் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட தில்லையாடி இ.ரெ.கணேசன் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார். முனைவர் பா.இராசா, முனைவர் க. பலராமன் ஆகியோர் உடனிருந்தனர்.