March, 2017    
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : கவிதைத் திருவிழா
நிகழ்வு நாள் :
22.02.2015
தலைப்பு : கவிதைத் திருவிழா : 108 கவிஞர்கள் பங்கேற்கும் “சங்கத் தமிழ் வளர்க்கும் தங்கத்தலைவி அம்மா ”
   

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் “தமிழ்த்தாய் 67 – பெருவிழா”, தமிழ் வளர்ச்சி மாதம் பிப்ரவரி முழுமையும் நடைபெறுகிறது.  அதன் தொடர் நிகழ்வாக இன்று 22.02.2015  ஞாயிற்றுக் கிழமை,  முற்பகல் 11.00 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை நிறுவனமும்  இணைந்து நடத்தும் 108 கவிஞர்கள் பங்கேற்கும் “சங்கத் தமிழ் வளர்க்கும் தங்கத்தலைவி அம்மா ” எனும் தலைப்பில் கவிதைத் திருவிழா  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார். திருமிகு ஜி. செந்தமிழன், சைதை சட்டமன்ற உறுப்பினர் அம்மாவின் ஆட்சி அருந்தமிழின் மாட்சி மற்றும் ஒளிரும் தமிழகம் என்ற கவிதை நூலினையும்  வெளியிட்டார். மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர்/இலக்கிய அணிச் செயலாளர் மாண்புமிகு பா.வளர்மதி  அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கவிஞர் உடையார்கோயில் குணா (பொதுச்செயலாளர், தமிழ்த்தாய் அறக்கட்டளை, தஞ்சாவூர்) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்ற “சங்கத் தமிழ் வளர்க்கும் தங்கத்தலைவி அம்மா” எனும் தலைப்பில் கவிதைத் திருவிழாவில் பங்கேற்ற 108 கவிஞர்களுக்கு, மாலை 4.00 மணிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா  நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். கவிமாமணி துரை.இராசமாணிக்கம் (சிறப்புத்தலைவர், தமிழ்த்தாய் அறக்கட்டளை, தஞ்சாவூர் அவர்கள் முன்னிலையில் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் (தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் கவிபாடிய கவிஞர்களுக்குச்  சான்றளித்து வாழ்த்துரை  வழங்கினார்.  கவிஞர் சினேகன், திரைப்படப் பாடலாசிரியர் சிறப்புரை  வழங்கினார். கவிஞர் உடையார்கோயில் குணா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.