July, 2017    
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : புத்தக வெளியீடு
நிகழ்வு நாள் :
24.02.2015
தலைப்பு : மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாள் ஒரே நிகழ்வில் 171 நூல்கள் வெளியிடப்பட்டன.
   

மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா பிறந்த மாதமான பிப்ரவரியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் "தமிழ்த்தாய் 67 -பெருவிழா"  தமிழ் வளர்ச்சி மாதம் 2015 எனக் கொண்டாடிப் பல்வேறு நிகழ்ச்சிகளை  நடத்தி வருகிறது இதையொட்டி, மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளான  பிப்ரவரி 24ஆம் தேதியன்று  ஒரே நிகழ்வில் 171 நூல்கள்  வெளியிடப்பட்டன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பதிப்புத்துறை தலைவர் முனைவர் ஆ.தசரதன், நூலகர் இரா.பெருமாள்சாமி ஆகியோர் வரவேற்றனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப.  அவர்கள் நூல்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், மதுரை, உலகத் தமிழ்ச்சங்கத் தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் பா.இராசா உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தனிஅலுவலர் தா.மார்டின் செல்லதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.