மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பெற்றுள்ள இரண்டு அறக்கட்டளைகளின் சொற்பொழிவுகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அறக்கட்டளையின் பொருண்மைகளாக “வள்ளலாரின் வழியில் புரட்சித் தலைவி” “அம்மா ஆட்சியில் தமிழ் வளர்ச்சியும் பண்பாடும்” என்ற தலைப்புகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்செயலாளர் முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்ட நூல்களில் தமிழர்களின் பண்டைய கலை அறிவியல், இலக்கியம் ஆகியவற்றை விவரிக்கும் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் இடம் பெற்றன. வர்ம பீரங்கி, மூலிகை மர்மம், பெண்ணியம், அயலகத் தமிழ்ப் பணிகள் எனப் பல்வேறு புதுமையான தலைப்புகளில் அரிய மற்றும் புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.