March, 2017    
தமிழ்த்தாய் 67 – பெருவிழா : நிறைவு
நிகழ்வு நாள் :
28.02.2015
தலைப்பு : தமிழ்த்தாய் 67 – பெருவிழா : நிறைவு
   

சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா, பிப்ரவரி திங்கள் 1-ஆம் நாள் முதல் 28-ஆம் நாள் வரை "தமிழ்த்தாய் 67 -பெருவிழா"வாக கொண்டாடப்பட்டது. இப்பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக “பழந்தமிழர் வாழ்வில் இயற்கை” என்ற தலைப்பில் தமிழ்த்தாய்-67 பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி 28.02.2015 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் மாநில முழுவதிலும் இருந்து 40 பேராளர்கள் கலந்துகொண்டு கட்டுரை வாசித்தனர்.

நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை, உயர்கல்வி மன்ற செயலாளர், திரு.கரு.நாகராசன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் சிறப்பியல்புகளை எடுத்துக்கூறியதுடன் அவர்கள் ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள சாதனை அளவிலான வளர்ச்சியை புகழ்ந்துரைத்தார். தொடர்ந்து பேசிய பொதிகை தொலைக்காட்சி நிலைய இயக்குநர் திரு.பால.இரமணி அவர்கள் தமிழ் வளர்ந்து செழித்த விவரம் குறித்து அனைவரும் ரசிக்கும்படி பேசினார்.

முன்னதாக நிறுவன இயக்குநர் அவர்கள் இந்நிறைவு விழாவிற்கு வருகைத்தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் வேலூர், தனபாக்கியம் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை தலைவர், முனைவர் ஞா.சுஜாதா சிவகுமார் மற்றும் அக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பி.சி.ஜெகதா, நிறுவன பேராசிரியர் முனைவர் பா.இராசா, தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச்செயலாளர் கவிஞர் உடையார்கோயில் குணா, அவ் அறக்கட்டளையின் துணைத்தலைவர் பாவலர் ப.கோ.நாராயணசாமி மற்றும் பல தமிழறிஞர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இறுதியில் பிற்பகல் 4.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள் ஆகியோரால் “தமிழ்த்தாய்-67” பெருவிழாவின் நினைவாக 108 மரக்கன்றுகள் நடப்பட்டு விழா நிறைவு செய்யப்பட்டது.