August, 2017    
சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
19.06.2015
தலைப்பு : ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி – ஒரு பார்வை
   

19.06. 2015  ஆம் நாள் அன்று முற்பகல் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் சார்பில்  ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி – ஒரு பார்வை எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இப்பொழிவினை ஆஸ்திரேலியாவின் மெல்பொர்ன் மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஆஸ்திரேலியத்  தமிழ்க் கலாசாலையின் நிறுவனர் திரு நாகை கா. சுகுமாரன் அவர்கள் வழங்கினார்.
               ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களை வளத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக குடியேறியவர்கள் , வறுமையின் காரணமாகம் குடியேறியவர்கள் என்று வேறுபடுத்திப் பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில் நியூவேல்ஸ், மெல்பெர்ண், அடிலைடு ஆகிய மாநிலங்களில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் பிறமொழிகளை வளர்ப்பதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் நிதியுதவி அளித்துவருகின்றது. அவ்வகையில் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக தமிழ்பள்ளிகள் நடத்துவதற்கு, தமிழ்ச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், நூல் வெளியிடுதல் போன்ற மேம்பாட்டுப்பணிகளுக்காக அரசாங்கம் நிதியுதவி அளித்து வருகின்றது.  
           அவ்வகையில் , ஆஸ்திரேலியா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மொழி கற்பித்தல் மேம்பாட்டிற்காக  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்  தமிழகத்திலிருந்து மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாகத் தமிழ் அறிஞர்களை அனுப்பி அங்குள்ள தமிழ் ஆசிரியற்களுக்குப் பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது என்று கூறினார் பொழிவாளர் நாகை சுகுமாரன் அவர்கள்.
             இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்விற்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமைத் தாங்கினார். வரவேற்பு மையத்தின் பொறுப்பாளர் அவர்கள் நன்றியுரை நல்க நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
        மேடையில் இடமிருந்து : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தனி அலுவலர் மார்டின் செல்லதுரை, வரவேற்பு மையப் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம், திருமதி கமலவல்லி சுகுமாரன், நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலை நிறுவனர் நாகை கா. சுகுமாரன்.