Friday, December 15 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            கவிஞர் புதுவைச்சிவத்தின் சீர்திருத்த நாடகங்கள்
நிறுவன வெளியீட்டு எண் : 733
ஆசிரியர் :
இளங்கோ, சிவ முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 120.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 272
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 600 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

புதுவைச் சிவம் என்று புனைபெயர் கொண்ட புதுவைச் ச.சிவப்பிரகாசம் அவர்களின் பன்முகப் படைப்பாற்றல் கவிதை, நாடகம், இசைப்பாடல்கள், சிறுகதைகள், காவியங்கள், கட்டுரைகள், திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கிய வகைமைகளில், கலை சார்ந்து வெளிப்பட்டுள்ளது.  இவற்றுள் அவரது நாடகப் படைப்புகளும், அவற்றின் இயக்கமும், அவை மேடையேற்றம் கண்ட நிகழ்வுகளும் இயக்கம் சார்ந்தவை மட்டுமல்லாது, தமிழினம் சார்ந்த கலை, இலக்கியம், பண்பாட்டில் சீர்திருத்த நோக்கம் உடையவையாக, அதாவது திராவிட இயக்கக் கருதுகோள்கள் வழி அமைக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. இந்நிலை அவரது படைப்புகளை ஆழமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் நிலையை மட்டுமின்றி ஓர் இனத்தின் பகுத்தறிவு வழிப்பட்ட சீர்திருத்தச் சிந்தனைத் தாக்கத்தின் தொடர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இக்கருத்தை நிறுவும் வகையில் கவிஞர் புதுவைச் சிவத்தின் நாடகங்களில் ஓர் ஆய்வு நிகழ்த்தப்பட்டு அது தற்போது அறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சொற்பொழிவு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

உள்ளடக்கம்
 
அ. நாடகக் கலை வளர்ச்சியும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பும்
ஆ. புதுச்சேரியில் நாடக வளர்ச்சி
இ. புதுவைச்சிவம் நாடகங்கள்
ஈ. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் புதுவைச் சிவத்தின் நாடகங்கள்
உ. நாடகப் பாடல்கள்
ஊ. தொகுப்புரை
அடிக்குறிப்புகள்