Saturday, April 29 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            திணை வரலாறு
நிறுவன வெளியீட்டு எண் : 738
ஆசிரியர் :
ஷாஜகான் கனி, வெ.மு முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 70.00
புத்தகப் பிரிவு : அறக்கட்டளைச் சொற்பொழிவு
பக்கங்கள் : 160
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 400 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

தமிழர் வரலாறு பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்ற பல அறிஞர்கள் எழுதியுள்ளராயினும்,தொல்காப்பியருக்கு வெகுகாலத்திற்கு முன்பே  ஏற்பட்டு வந்திருந்த தமிழர்களின் திணைகள் சார்ந்த நாகரிக வரலாற்றைக் கூறும் நூல்கள் தமிழில் எழவில்லை.இந்நிலையில் பேராசிரியர் முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள் எழுதியுள்ள இந்நூல் பாராட்டுக்குரியதாகும்.சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் மாந்தர்களின் உருவாக்கத்தை ஆராய்ந்து, அம்மாந்தர்களில் முதலாவதாக நாகரிகம் பெற்றவரே தமிழினத்தார் என்றும், தமிழர்களே பல நாடுகளில் தொன்மைக் காலத்தே பரவினர் என்றும், அவர்களின் மொழியாகிய தமிழே அவற்றுள் பரவிற்று என்றும் வரலாற்று முறையிலும், தொல்காப்பியக் கொள்கைகளை அடியொற்றியும், சங்க இலக்கியங்களிலிருந்து சான்றுகள் காட்டியும் இந்நூல் ஏழு தலைப்புகளில் எழுதப் பெற்றுள்ளது. குறிப்புகளுடனும், படவிளக்கங்களுடனும், துணைநூற் பட்டியலுடனும் முறையாக அமைந்துள்ள நூலாகும். 

உள்ளடக்கம்
  • திணை - விளக்கம்
  • உலகம் பிறந்தது
  • உயிர்களின் தோற்றம்
  • மனிதனின் மூதாதையர்
  • மனிதன் தோன்றினான்
  • முதல் மனிதன் - இந்தியன்... தமிழன் !
  • தமிழரின் திணை வரலாறு

குறிப்புகள்

துணைநூல்கள்