Friday, July 21 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் ( தொகுதி I )
நிறுவன வெளியீட்டு எண் : 743
பதிப்பாசிரியர் :
விஜயராகவன், கோ முனைவர்
வளர்மதி, மு முனைவர்
சிதம்பரம், கு முனைவர்
ஜானகி, து முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 175.00
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 400
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 600 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து தங்கள் படைப்பு இலக்கியங்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படைப்பாளிகள் அவர்களின் தாய்மண் சார்ந்தும் புலம்பெயர்ந்த மண்ணின் வாசத்தோடும் பதிவு செய்து வருகின்றனர். தற்காலத் தமிழிலக்கியம் என்பது இந்தியத் தமிழிலக்கியம், இலங்கைத் தமிழிலக்கியம், மலேசியத் தமிழிலக்கியம், சிங்கப்பூர்த் தமிழிலக்கியம், மொரிசீயசு தமிழிலக்கியம், அமெரிக்கத் தமிழிலக்கியம், கனடாத் தமிழிலக்கியம் எனத் தமிழ் இலக்கியங்கள் வகைமை படுத்தப்படுகின்றன. இந்தியத் தமிழிலக்கியம், இலங்கைத் தமிழிலக்கியம் தவிர பிற நாடுகளில்   இருந்து வெளியாகும் தமிழிலக்கியங்கள் - புலம்பெயர்ந்த தமிழிலக்கியங்கள் அல்லது அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்களென்ற சொல்லாட்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. அயலகத் தமிழ் இலக்கியங்கள் என்ற சொல்லாட்சி உலகத் தமிழிலக்கியம் என்ற சொல்லாக்கத்திற்கு வழிகோலுகின்றன. உலகத் தமிழிலக்கியத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் அயல் நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் ஒன்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2013 பிப்ரவரித் திங்கள் 14, 15 ஆகிய நாட்களில் சிறப்பாக நடத்தியது. இக்கருத்தரங்கில் இடம்பெற்ற கட்டுரைகள் அயநாட்டுத் தமிழ் இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, வாழ்க்கைப் போராட்டம், இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வியல், சமூகச் சிக்கல்கள், பெண்ணியம், மொழி - பண்பாட்டுத் தாக்கம், மொழிநடை, கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், சிறுவர் இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், இணையத்தளத்தில் இலக்கியங்களின் வளர்ச்சி, அயலகத் தமிழ் வானொலிகளில் இலக்கிய ஒலிபரப்புப் பணிகள் ஆகிய பொருண்மை குறித்துப் பேசும் கட்டுரைகளாகும்.

கருத்தரங்கப் பொருண்மைக் கட்டுரை
அயலகத் தமிழ் இலக்கியம் : சமூக உறவில் ஒரு மரத்தின் இரு கிளைகள் - திருமதி றீற்றா பற்றிமாகரன்
 
கவிதை
1. ஈழத்துக் கவிதைகளில் தேசமும் தேசியமும் - திரு க.இரகுபரன்
2. இலங்கைத் தமிழ் நாட்டார் பாடல்களில் கவிகள் அறிமுகமும் தத்துவமும் - திரு எம்.ஐ.எம்.ஹனிபா
3. இலங்கையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டு வரை எழுந்த பள்ளு இலக்கியங்கள் குறித்த சிறப்பு ஆய்வு - திருமதி றூபி வாலன்ரினா பிரான்சிஸ்
4. ஈழத்துக் கவிதைகளில் மக்களின் சமூக நிலை - திரு ஆர்.ஆனந்தஜோதி
5. ஆறாம் திணை : ஈழத்துப் போர் இலக்கியங்கள் - முனைவர் இராமசாமி வெங்கடேசன்
6. போருக்குப் பின்னான ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் : விட்டு விலகும் பெருங்கதையாடல் - திரு ந.மயூரரூபன்
7. காசி ஆனந்தன் கவிதைகளில் வாழ்வியல் கூறுகள் - முனைவர் க.சேக் மீரான்
8. தீபச்செல்வனின் "பதுங்கு குழியில் பிறந்த குழந்தை" காட்டும் சமூகம் - திரு சு.இலட்சுமணன்
9. ஈழத்து நவீன பெண் ( கவிஞர்களின் ) கவிதைகள் பற்றிய விமர்சன நோக்கு - கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
10. எதிர்ப்பிலே பிறந்த கவிதைகள் : ஈழத்துப் பெண் கவிஞர்கள் - முனைவர் ந.அறிவுராஜ்
11. புலவர் சிவநாதனின் படைப்புகளில் புலம்பெயர் இலக்கியப் பண்புகள் - செந்நெறிச் செல்வர் சு.யோ.பற்றிமாகரன்
12. வலிகளில் விழிகள் கண்ட மலேசியத் தமிழ் இலக்கியம் - திரு ம. சித்ரகலா
13. மலேசியத் தமிழ்க் கவிதை வளர்ச்சி - திருமதி வே.விஜி
14. மலேசியத் தமிழ்க் கவிதைகளில் சமூகம் - கவிஞர் சுரா
15. மலேசியத் தமிழ்ப் புதுக் கவிதைகளில் பெண் படைப்பாளர்களின் ஆளுமை - திரு வே.சுமதி
16. புலம்பெயர் இலக்கியங்கள் பார்வையில் மலேசியக் கவிஞர் கே.எஸ்.செண்பகவல்லி - முனைவர் பா.த.கிங்ஸ்டன்
17. மலேசியத் தமிழ்க் கவிதைகளில் பெண் நிலை - முனைவர் ச.சிவகாமி
18. மலேசியத் தமிழ்ச் சமுதாயச் சீர்திருத்த நோக்கில் ந.பச்சைபாலன் கவிதைகள் - மு.சுகந்தி
19. மலேயாவின் மூத்த கவிஞர் சிங்கப்பூர்ச் சித்திரக்கவி நாவலர் சி.வே.நாராயணசாமி நாயகர் - முனைவர் கோட்டி திருமுருகானந்தம்
20. மலேசியத் தமிழ்க் கவிதை உலகில் ஒரு விண்மீன் - முனைவர் முரசு நெடுமாறன்
21. பெருவெளியைச் சுமந்தவாறே பறத்தல் ( மலேசிய, சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகள் - சமகாலச் செல்நெறிகள் ) - முனைவர் தே.வெற்றிச்செல்வன்
22. சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகளில் ஆளுமை மேம்பாடு -  து.வெங்கடேஸ்வரி
23. கனடா நாட்டுக் கவிஞர் புகாரியின் கவிதைகளில் மொழிநடை - திருமதி கு.நாகம்மாள்
 
சிறுகதை
24. இலங்கை :மலையகச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் - திரு பெருமாள் சரவணகுமார்
25. புலம்பெயர்ந்தோர் தமிழ்ச்சிறுகதைகளில் மொழி, இன, பண்பாட்டு அடையாள இழப்பு - முனைவர் இரா சந்திரசேகரம்
26. அயல் சிறுகதைகளின் செல் நெறி - முனைவர் ப.சரவணன்
27. இலங்கை டோமினிக் ஜீவா அவர்களின் தண்ணீரும் கண்ணீரும் சிறுகதைத் தொகுதி - ஒரு அனுபவ ஆய்வு - முனைவர் - நயம்பு அறிவுடை நம்பி
28. இலங்கைத் தமிழ்ப் புதினங்களும் சிறுகதைகளும் - முனைவர் இரத்தின புகழேந்தி 
29. மலேசியச் சிறுகதையின் மனமும் மணமும் - திரு சே.கண்மணி
30. மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளும் கருப்பொருளும் - முனைவர் அருள் செல்வன் இராஜு
31. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் - மரபும் தனித்துவமும் - முனைவர் கா.செல்லப்பன்
32. சிங்கப்பூர் ஜே.எம்.சாலி, கமலாதேவி அரவிந்தன் சிறுகதைப் படைப்புகள் - ஓர் அறிமுகம் - முனைவர் எச்.முஹமது சலீம்
33. சிங்கப்பூரத் தமிழ் இலக்கியமும் சமூகமும் - முனைவர் சே.மோகனசுந்தரி
34. இளங்கண்ணனின் தமிழ்ச் சிறுகதைகளில் மொழிநடை - முனைவர் ம.சரளாதேவி
35. தமிழ்ச் சூழலில் அயலகச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் - முனைவர் தா.பூவை சுப்பிரமணியம்