Saturday, May 27 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் ( தொகுதி lI )
நிறுவன வெளியீட்டு எண் : 744
பதிப்பாசிரியர் :
விஜயராகவன், கோ முனைவர்
வளர்மதி, மு முனைவர்
சிதம்பரம், கு முனைவர்
ஜானகி, து முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 200.00
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 456
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 600 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து தங்கள் படைப்பு லக்கியங்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படைப்பாளிகள் அவர்களின் தாய்மண்சார்ந்தும் புலம்பெயர்ந்த மண்ணின் வாசத்தோடும் பதிவு செய்து வருகின்றனர். தற்காலத் தமிழிலக்கியம் என்பது இந்தியத் தமிழிலக்கியம் இலங்கைத் தமிழிலக்கியம், மலேசியத் தமிழிலக்கியம், சிங்கப்பூர்த் தமிழிலக்கியம், மொறிசியசு தமிழிலக்கியம், அமெரிக்கத் தமிழிலக்கியம், கனடாத் தமிழிலக்கியம் எனத் தமிழ் இலக்கியங்கள் வகைமை படுத்தப்படுகின்றன. இந்தியத் தமிழிலிக்கியம், இலங்கைத் தமிழிலிக்கியம் தவிர பிற நாடுகளில் இருந்து வெளியாகும் தமிழிலக்கியங்கள் - புலம்பெயர்ந்த தமிழிலக்கியங்கள் அல்லது அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்லென்ற சொல்லாட்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. அயலகத் தமிழ் இலக்கியங்கள் என்ற சொல்லாட்சி உலகத் தமிழிலக்கியம் என்ற சொல்லாக்கத்திற்கு வழிகோலுகின்றன. உலகத் தமிழிலக்கியத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் அயல் நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் ஒன்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2013 பிப்ரவரித் திங்கள் 14, 15 ஆகிய நாட்களில் சிறப்பாக நடத்தியது. இக்கருத்தரங்கில் இடம்பெற்ற கட்டுரைகள் அயநாட்டுத் தமிழ் இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, வாழ்க்கைப் போராட்டம், இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வியல், சமூகச் சிக்கல்கள், பெண்ணியம், மொழி - பண்பாட்டுத் தாக்கம், மொழிநடை, கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், சிறுவர் இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், இணையத்தளத்தில் இலக்கியங்களின் வளர்ச்சி, அயலகத் தமிழ் வானொலிகளில் இலக்கிய ஒலிபரப்புப் பணிகள் ஆகிய பொருண்மை குறித்துப் பேசும் கட்டுரைகளாகும்.

நாவல்
1. ஈழத்தில் மலைய நாவல் இலக்கியத்தின் பங்களிப்பு - எஸ்.வை.ஶ்ரீதர்
2. மலையத் தமிழ் நாவல்களில் இலங்கைவாழ் இந்திய வம்சாவழித் தமிழர்களின் சமூகப் பிரச்சனைகளும் வெளிப்பாட்டு முறைமைகளும் - பத்மநாதன் கலாவல்லி
3. இலங்கைத் தமிழ் நாவல் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு - த.அஜந்தகுமார்
4. இலங்கை மலையகப் பெண் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள் - முனைவர் து.ஜானகி
5. அண்மைக்கால இலங்கைப் படைப்புகளில் எஸ்.ஏ.உதயனின் நாவல்கள் - ஓர் ஆய்வு - சு.குணேஸ்வரன்
6. ராஜேஸ்வரியின் "நாளைய மனிதர்கள்" புதினத்தில் பண்பாட்டுப் பதிவுகள் - முனைவர் க.முருகேசன்
7. "பனி பெய்யும் இரவுகள்" புதினத்தில் மனப்போராட்டங்கள் - முனைவர் மு.நாகராஜன்
8. சயாம் - மரண இரயில் நாவலின் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலை - ம.சித்ரா
9. முத்தம்மாள் பழனிச்சாமியின் "நாடுவிட்டு நாடு" நூல்வழி அறியலாகும் மலேசியத் தமிழ்ச் சமுதாயச் சூழல் ( ஐம்பதுகளுக்கு முன் ) முனைவர் ப.சத்யா
 
இணையதளம்
10. அயலகத் தமிழர்களின் இணையத்தள இலக்கியப் படைப்புகள் - சுகந்தி வெங்கடேஷ்
11. இணைய உலக இலக்கியப் படைப்புகள் - செ.சு.நா.சந்திரசேகரன்
12. புகலிடத் தமிழர்களின் இணைய இதழ்கள் - பா.உமா சங்கரி
13. கனேடியத் தமிழர்களின் இணையதற இலக்கியப் படைப்புகள் - ஒரு மதிப்பீடு - முனைவர் எஸ்.சிதம்பரம்
பொது
14. அயலகத் தமிழரும் தமிழ் இலக்கியப் படைப்புகளும் - முனைவர் க.சசிரேகா
15. பத்தொன்பதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சி - பேராசிரியர் துரை மனோகரன்
16. ஈழத்து நாட்டார் இலக்கியம் வழி வாழ்வியல் - ஏ.மேனகா
17. ஈழத் தமிழரின் மரபுசார் தபமிழ் இலக்கிய உறவுகள் - ஊ.கன்னியப்பன்
18. ஈழத்துப் பேச்சு வழக்குத் தமிழும் யாழ்ப்பாணத் தமிழும் ஓர் மொழியியல் ஆய்வு - வேல் நந்தகுமார்
19. ஈழத்துக் கவிஞர் இ.முருகையனின் மொழி, இலக்கணச் சிந்தனைகள் - ஓர் அறிமுகக் குறிப்பு - திரு செல்லத்துரை சுதர்சன்
20. ஈழத்தில் சைவத் தமிழ்க் கல்வியும் நவீனத்துவமும் - திரு ஈஸ்வரநாதபிள்ளை குமரன்
21. நவீன தமிழ் இலக்கியத்திற்கு இலங்கையின் பங்களிப்பு - பேராசிரியர் செ.யோகராசா
22. நவீன தமிழ் இலக்கியத்தில் புதிய வகைப்பாடு - ( ஈழத்துப் ) போரிலக்கியம் - கலாபூஷணம் முனைவர் தி.ஞானசேகரன்
23. இலங்கைத் தமிழ் இதழ்களில் இலக்கியப் படைப்புகள் - முனைவர் சௌ.பா.சாலா வாணிஶ்ரீ
24. அயலகத் தமிழ் இதழ் 'இந்து சாதனம்' ( யாழ்ப்பாணம் இலங்கை பழந்தமிழ் இதழ் ) - முனைவர் இல.செ.திருமலை
25. ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள் (1939 வரை) திரு ஞா.பாலச்சந்திரன்
26. கவிஞர் சேரனின் கட்டுலரைத் தொகுப்புகளில் தமிழ்ச் சமூகமும் அரசியலும் - திரு சி.கோபியா
27. ஈழத்து அரங்க எழுச்சியில் 'பொங்கு தமிழ்' நாடக அரங்கு - யாழ் தர்மினி பத்மநாதன்
28. சிங்கப்பூர்த் தமிழ் நாடகங்கள் நோக்கும் போக்கும் ( 1935 முதல் 2007 வரையிலான வ,ராற்றின் வழி ) - முனைவர் கே.இரா.கமலா முருகன்
29. ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் தமிழ்ப் பணிகள் - திரு மார்க்கண்டன் ரூபவதனன்
30. சுவாமி விபுலானதரின் தமிழியல் ஆய்வுகள் ( 1892 - 1949 ) - பேராசிரியர் அம்மனகிளி முருகதாஸ் 
31. மலேசியாவில் தமிழியல் - புதிய போக்குகள், புதிய பாதைகள் - முனைவர் பா.கௌசல்யா
32. மலேசியத் தமிழ்ச் சிறுவர் இலக்கியம் - முனைவர் எஸ்.குமரன்
33. அமெரிக்கப் பெண் படைப்பாளி காஞ்சனா தாமோதரனின் மொழிநடை - திருமதி கி.ஜமுனா, முனைவர் கு.சிதம்பரம்
34. பிரான்ஸ் நாட்டுப் படைப்பாளி நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துலகம் - முனைவர் மு.ளங்கோவன்
35. நெதர்லாந்துப் படைப்பாளி கலையரசனின் அகதி வாழ்வியல் - பயணங்கள் - உரிமைகள் - முனைவர் கு.சிதம்பரம்
36. சீனத்தில் விளைந்த தமிழ்ப் புடைப்புகள் - முனைவர் ந.கடிகாசலம்
37. சீன வானொலியின் தமிழ் நூல்களும் படைப்பாளர்களும் - திரு தங்க ஜெயசக்திவேல்
38. Folk songs of Sri Lnaka - Dr M.A.Bhageerathi
39. Illam Novelist S.Ganeshalingan's Long journy as an Epic told in lyric parts - Dr N.Murugaiyan