Friday, July 21 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            சுவடிப் பதிப்புகளில் உரைவேறுபாடுகள் ( தொகுதி I )
நிறுவன வெளியீட்டு எண் : 750
பதிப்பாசிரியர் :
விஜயராகவன், கோ முனைவர்
மகாலட்சுமி, தி முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 135.00
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 304
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 600 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

ஐரோப்பிய நாடுகளில் தொல் இலக்கியப் பாடத்தை அறுதி செய்யவும் பயில்வு முறையாவே மூலபாடத் திறனாய்வை ( Textual Criticism ) உருவாக்கியுள்ளனர். இதனை அடிப்படையில் சமய நூல்களையும் ( Theology Texts ), பழம் இலக்கியப் பனுவல்களையும் புதிய பொருள்கோடலுக்கு ( Hermenautious )  உட்படுத்தி உரை காணுகின்றனர். இவ்வகையில் தமிழில் வரப்பெற்றுள்ள பதிப்புகள் அனைத்தும் பாட வேறுபாட்டு நோக்கிலும், உரை வேற்றுமை நோக்கிலும், மூலபாடத் திறனாய்வு நோக்கிலும், வரலாற்றுச் சமூகவியல் தளத்தில் ஆராயப்படவேண்டும் என்ற நோககம் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். 

 
இந்நூலில் அமைந்துள்ள கட்டுரைகள் தொல்காப்பியம் தொடங்கி மருத்துவ, சோதிட, மந்திர நூல்கள் வரை பல்வேறு பொருண்மை சார்ந்தன. இந்நூலின் முதற் தொகுதியில் 29 கட்டுரைகளும், இரண்டாம் தொகுதியில் 35 கட்டுரைகளும் அமைந்துள்ளன. இவற்றை சிங்கப்பூர், மலேசியா, தில்லி, கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகத் தமிழ் அறிஞர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். தமிழ் ஆய்வுப் பரப்பில் தொடர்ந்து ஆய்வுப் பொருளாக பதிப்பும் சுவடியும் இருந்து வருகிறது. இதனையொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013  மார்ச்சு 6,  7 ஆகிய நாட்களில் நடத்தப்பெற்ற  சுவடியியல் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்ட  கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 
 
பொருளடக்கம்
 
1. நச்சினார்க்கினியரின் உரை வழு  - முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி
2. அடிகளாசிரியரின் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பில் சுவடி நோக்கு - முனைவர் சி.பழனியாண்டி
3. தொல்காப்பிய எழுத்ததிகார உரை வேறுபாடுகள் - முனைவர் கி.ஆதிநாராயணன்
4. தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனார் உரைநெறி - மு.ப ஆய்வாளர் பொ.வேல்முருகன்
5. தொல்காப்பியச் சொல்லதிகாரப் பதிப்பில் சுவடி நோக்கு - மு.ப ஆய்வாளர் ஆர்.அருள்மணி
6. தொல்காப்பிய ஆங்கிலப்பதிப்புகளும் மொழிபெயர்ப்பும் - முனைவர் கா.இரவிச்சந்திரன்
7. தொல்காப்பியப் பதிப்பு வரலாற்றில் அறியப்படாத மறுபக்கம் ( வ.உ.சி. - எஸ்.வையாபுரிப்பிள்ளை பதிப்புகள் ) மு.ப ஆய்வாளர் த.தென்னவன்
8. தொல்காப்பிய உரைகள் முற்காலப் பார்வையும் தற்கால நோக்கும் - முனைவர் இரா.இராஜேஸ்வரி
9. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் - பொருளும் உரையும் - முனைவர் மா.பெரியசாமி
10. செம்மொழித் தகுதியும் செம்பதிப்புகளின் தேவையும் - முனைவர் இரா.வெங்கடேசன்
11. ஐங்குறுநூறு உரை வேறுபாடுகள் - முனைவர் அ.அறிவுநம்பி
12. அகநானூறு நெய்தல் பாடல்கள் ( சுவடி வேறுபாடுகளும் தீர்வுகளும் ) - முனைவர் சா.வே.சுப்பிரமணியன்
13. அகநானூற்றில் பாடவேறுபாடு - முனைவர் அ.கந்தசாமி
14. உரைநடை வளர்ச்சியில் புறநானூறு காணும் உரைவேறுபாடு - முனைவர் அ.சிவக்குமார்
15. பதிற்றுப்பத்து - முதற்பத்தின் தலைவன் உதியஞ்சேரலாதன் குறித்த உரைவேறுபாடுகள் - முனைவர். ஆ.தசரதன்
16. கலித்தொகையில் பாடவேறுபாடு - முனைவர் பா.ஜான்சிராணி
17. எழுகுளிறா ? எழுகளிறா ? - முனைவர் மோ.கோ.கோவைமணி
18. உ.வே.சாமிநாதையரின் சங்க இலக்கியப் பதிப்பின் உரைநயம் - மு.ப ஆய்வாளர் சி.கங்காதரன்
19. ஆற்றுப்படை நூல்களில் உரைவேறுபாடுகளும் கருத்து வேறுபாடுகளும் - மு.ப ஆய்வாளர் க.கிரிவாசன்
20. பதிற்றுப்பத்து - ஔவை சு துரைசாமிப்பிள்ளை உரைத்திறன் - மு.ப ஆய்வாளர் ச.கண்ணதாசன்
21. கி.வா.ஜகநாதன் - திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு - முனைவர் ச.சிவகாமி
22. திருக்குறள் பாட வேறுபாட்டின் சிறப்புகள் - முனைவர் கை.சங்கர்
23. நாலடியார் - பதிப்பும் உரையும் - மு.ப ஆய்வாளர் ச.பிரியா
24. சிலம்பு - பாடவேறுபாடு - முனைவர் இரா.காசிராசன்
25. சிலப்பதிகார உரை வேறுபாடுகள் - முனைவர் தி.மகாலட்சுமி
26. சிலப்பதிகார அழற்படுகாதையில் இடைச்செருகல் - மு.ப ஆய்வாளர் ப.வித்தியாவதி
27. மணிமேகலை உரைவேறுபாடுகள் - முனைவர் மு.சற்குணவதி
28. சீவகசிந்தாமணியில் உரைவேறுபாடு - முனைவர் க.சங்கர்
29. காப்பியங்களில் காணப்படும் பாடவேறுபாடுகள் - முனைவர் மூ.கருணாநிதி