Monday, August 21 2017 Publication Division of International Institute of Tamil Studies
பதிப்புத் துறை புத்தகங்கள் ஆசிரியர்கள் புத்தக வகைகள் புத்தக விற்பனை
            சுவடிப் பதிப்புகளில் உரைவேறுபாடுகள் ( தொகுதி II )
நிறுவன வெளியீட்டு எண் : 751
பதிப்பாசிரியர் :
விஜயராகவன், கோ முனைவர்
மகாலட்சுமி, தி முனைவர்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
விலை : 140.00
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 314
மொழி : தமிழ்
கட்டுமானம் : சாதாரணம்
நிறை : 600 gm
புத்தக அறிமுகக் குறிப்பு :

ஐரோப்பிய நாடுகளில் தொல் இலக்கியப் பாடத்தை அறுதி செய்யவும் பயில்வு முறையாவே மூலபாடத் திறனாய்வை ( Textual Criticism ) உருவாக்கியுள்ளனர். இதனை அடிப்படையில் சமய நூல்களையும் ( Theology Texts ), பழம் இலக்கியப் பனுவல்களையும் புதிய பொருள்கோடலுக்கு ( Hermenautious )  உட்படுத்தி உரை காணுகின்றனர். இவ்வகையில் தமிழில் வரப்பெற்றுள்ள பதிப்புகள் அனைத்தும் பாட வேறுபாட்டு நோக்கிலும், உரை வேற்றுமை நோக்கிலும், மூலபாடத் திறனாய்வு நோக்கிலும், வரலாற்றுச் சமூகவியல் தளத்தில் ஆராயப்படவேண்டும் என்ற நோககம் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். 

 
இந்நூலில் அமைந்துள்ள கட்டுரைகள் தொல்காப்பியம் தொடங்கி மருத்துவ, சோதிட, மந்திர நூல்கள் வரை பல்வேறு பொருண்மை சார்ந்தன. இந்நூலின் முதற் தொகுதியில் 29 கட்டுரைகளும், இரண்டாம் தொகுதியில் 35 கட்டுரைகளும் அமைந்துள்ளன. இவற்றை சிங்கப்பூர், மலேசியா, தில்லி, கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகத் தமிழ் அறிஞர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். தமிழ் ஆய்வுப் பரப்பில் தொடர்ந்து ஆய்வுப் பொருளாக பதிப்பும் சுவடியும் இருந்து வருகிறது. இதனையொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013  மார்ச்சு 6,  7 ஆகிய நாட்களில் நடத்தப்பெற்ற  சுவடியியல் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 
 
1. தலபுராணப் பதிப்புகள் - முதுமுனைவர் மா.ச.அறிவுடைநம்பி
2. திருவாசகச் சிவபுராணப் பாடல்களில் சுவடி நோக்கு - முனைவர் ஆ.சிவபெருமான்
3. திருவாசக உரைவேறுபாடுகள் - முனைவர் க.முருகேசன்
4. திருமந்திரம் எட்டாம் தந்திரம் பாட, உரை வேறுபாடுகள், இரு உரை ஒப்பாய்வு - புலவர் பூவை.சு.செயராமன்
5. பெரியபுராணமும் பதிப்பும் - முனைவர் சி.வீரமணி
6. திருவருட்பா உரை வேறுபாடுகள் - முனைவர் மகா பாண்டியன்
7. பெரியவாச்சான்பிள்ளை உரைவேறுபாடுகள் - முனைவர் த.பூமி.நாகநாதன்
8. தனிப்பாடல் பதிப்புகள் - முனைவர் வே.நெடுஞ்செழியன்
9. தூது நூல்களில் உ.வே.சா. வழங்கிய பதிப்பு முகவுரைகள் - திரு.ஆ.இரா.பாரதிராஜா
10. மீனாட்சியம்மை குறம் - சித்தர் பதிப்பு - திரு க.நா.தினகரன்
11. விநாயகர் அகவல் பதிப்பில் காணப்படும் மாறுபாடு - முனைவர் மணிமாறன்
12. சுந்தரர் தேவாரத்தில் உரை வேறுபாடுகள் - முனைவர் ரெ.சொர்ணபிரபா
13. சுவடிகளில் பனுவலாக்கம் - முனைவர் டி.உமாதேவி
14. வடமொழிச் சுவடிகளைத் தமிழ்ப்படுத்துதல் - முனைவர் சந்திரமோகன்
15. சரஸ்வதி மகால் நூலக வடமொழிச் சுவடிகள் - திரு ஶ்ரீ சுதர்சன், திருமதி நா.ஜெயலட்சுமி
16. சித்தமருத்துவ ஓலைச்சுவடிகள் - முனைவர் முகைதீன் அப்துல் காதர்
17, வில்லும் விசையும் சூத்திரம் ஓர் அறிமுகம் - முனைவர் காஞ்சனா
18. அகத்தியர் குழம்பு - பாடவேறுபாடுகள் - செல்வி மீ.அபிதகுஜாம்பாள்
19. ஓலைச்சுவடியும் தந்ராவும் - திரு கு.கு.ரவி
20. சோதிடச் சுவடி பதிப்புகள் - முனைவர் மு.பிரபாகரன்
21. சுவடியியல் சோதிடத்தின் புதிய பரிணாமம் - முனைவர் டி.சரவணன்
22. சாதக அலங்காரத்தில் உரை வேறுபாடுகள் - முனைவர் மு.இராஜதுரை
23. சாதக அலங்காரம் - புத்திர பாவத்தில் உரைவேறுபாடுகள் - முனைவர் தி.கல்பனாதேவி
24. மனை சாத்திரத்தில் அறிவியல் கூறுகள் - திரு ஏ.ஜெயக்குமார், திரு ப.கல்விராஜன்
25. மந்திரச்சுவடிகள் - திரு டி.சி.சந்திரசேகர்
26. சிவவாக்கியத்தில் உரை வேறுபாடுகள் - முனைவர் இளமதி சானகிராமன்
27. ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதில் மலேசியத் தமிழர்களின் பங்களிப்பு - திரு கோவி சிவபாலன்
28. பாரம்பரிய அறிவுப் பேணுகை - முனைவர் சீதாலட்சுமி
29. ஓலையும் மின் ஓலையும் - திரு இளங்குமரன் சிவநாதன்
30. ஓலைச்சுவடிகள் மின் படிமவாக்குதலும் பயன்ளும் - முனைவர் கோ.சாரங்கபாணி
31. ஓலைச்சுவடிக்கு கணினியின் பங்களிப்பு - முனைவர் சு.காந்தி, திரு சி.கமலநாதன்
32. இணையத்தில் கணினியின் பங்களிப்பு - திரு பகலவன், செல்வி த.பிரியா
33. ஆவணச் சுவடிப் பதிப்பு வரலாறு - முனைவர் த.கலாஶ்ரீதர்
34. சுவடி நாடகப் பதிப்பு - செல்வி பா.மனோன்மணி
35. நாயக்கர் கால ஓலை ஆவணங்கள் - முனைவர் கோ. உத்திராடம்