September, 2017 Journal of Tamil Studies R.No : 30339 / 72
 
இதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு
தமிழியல் - Journal Of Tamil Studies
ISSN : 0022-4855  
       Chief Editor :
Dr G.Vijayaraghavan
       Associate Editor :
Dr B.Raja
       Last Issue No :
089 - July 2015
 
Subscription
Within India Outside India
Annual : Rs 400.00 U.S $ 24   or  Rs 1400.00
Single Copy : Rs 120.00 U.S $ 7     or    Rs 400.00
Life Membership : Rs 6000.00 U.S $ 200  or Rs 12000.00
Instituional Membership : Rs 8000.00 U.S $ 250  or Rs 15000.00
'Tamil Culture' இதழின் வாழ்வும் வரலாறும் தமிழியல் நிலவரம்
பேராசிரியர் மறைதிரு எஸ்.தனிநாயகம் அடிகள் 1951 இல் ' Tamil Culture ' என்னும் பெயரில் ஒரு காலாண்டு இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். 1954 ஆம் ஆண்டின் இறுதியில் ' Academy of Tamil Culture ' என்னும் அமைப்பு தொடங்கப் பெற்றபோது, இந்த இதழை வெளியிடும் உரிமையைத் தனிநாயகம் அடிகள் அதற்கு மாற்றித் தந்தார். இதனைத் தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட சில சிக்கல்களின் காரணமாக 1966 க்குப் பின்னர் அந்த அமைப்பு இதழை வெளியிட இயலாமல் நிறுத்திவிட்டது. ஒரு பல்துறை ஆய்விதழாக உலக அளவில் பயன்படும் நோக்கில் இதனை நடத்த விரும்பிய தனிநாயகம் அடிகள் இந்த இதழை வெளியிடும் பொறுப்பினை ( பதிப்புரிமையை ) அந்த அமைப்பிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டார்.

கோலாலம்பூரிலும், சென்னையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளுக்கு வந்திருந்த பல்வேறு நாட்டு அறிஞர்கள், உலகளாவிய நிலையில் தமிழ்ப் பண்பாட்டை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து வெளியிட ஓர் இதழ் வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர், ' அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் ' ( International Association of Tamil Research ) என்னும் அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் இசைவினைப் பெற்று ' Tamil Culture ' இதழை ' Journal of Tamil Studies ' என்னும் மாற்றுப் பெயரில் அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் நடத்தி வந்தது.

பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் ' Journal of Tamil Studies ' இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1970 அக்டோபர் 21 இல் தொடங்கப் பெற்ற நிலையில், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்
( IATR ) அமைப்பு இந்த ஆய்விதழை அதே பெயரில் ( Journal of Tamil Studies ) நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதனை விளைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழை வெளியிட்டு வருகிறது.

இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ' Journal of Tamil Studies ' இதழ் தனிநாயகம் அடிகள் தொடங்கிய ' Tamil Culture ' என்னும் இதழின் மறு அவதாரமே தவிரப் புதியதன்று என்பதையும், ' Tamil Culture ' நின்றுவிடவில்லை என்பதையும் இவ்வரலாறு தெரிவிக்கிறது
.