September, 2017    

திருக்குறள் ஓவியப்போட்டி

பேரறிஞர் அண்ணா அவர்களால் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் முன்மொழியப்பெற்று உருவாகியதுதான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்த தாராள நிதியால் இன்று சென்னை தரமணி மையத் தொழில்நுட்ப வளாகத்தில் புதுக்கட்டடத்தில் பொலிவுடன் உயர் தமிழாய்வில் இந்நிறுவனம் ஈடுபட்டுப் பணியாற்றி வருகின்றது. கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் போன்றவை மூலம் இந்நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளது. முனைவர், ஆய்வியல் பட்ட மாணவர்களையும் உருவாக்கிவருவதோடு பல்துறைகளில் தமிழாய்வை ஊக்கப்படுத்திவருகின்றது.

செயற்கரிய செய்வார் பெரியர் என்னும் வள்ளுவரின் திருவாக்கிற்கு இணங்க செயலாற்றிய புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 23. 12. 2013 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் தொடங்கப்பெற்று சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இக்காட்சிக் கூடத்தில் திருக்குறள் தொடர்பான அரியநூல்களும் குறள் கருத்துக்களை மையப்படுத்தும் ஓவியங்களும் இடம்பெற்றிருப்பதால் நாள்தோறும் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களை இக் காட்சிக் கூடம் ஈர்த்துவருகின்றது. இத்தகைய தமிழ்ப் பணி வளர்ச்சிக்கு வித்திட்ட அம்மா அவர்களுக்கு நன்றி நவிலும் பொருட்டு அம்மா அவர்களின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு, திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் சார்பாகத் திருக்குறள் ஓவியப்போட்டி நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் திறமையுள்ள அனைத்து ஓவிய ஆசிரியர்களும் பங்கேற்கலாம். போட்டியில் முதல் மூன்று இடம்பெறும் ஓவியங்களுக்கு முறையே ரூ. 10,000/-, ரூ. 7,000/- ரூ. 5,000/- மற்றும் பங்கேற்போருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,000/- மற்றும் பாராட்டுச் சான்றும் 24.02.2017 ஆம் தேதியன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வழங்கப்படும்.

விதிகள்:

1. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் tjanaki@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் 10.02.2017 ஆம் தேதிக்குள் தங்களது பெயரினைப் பதிவுசெய்தல் வேண்டும்.

2. 11.02.2017 ஆம் தேதிக்குப் பிறகு போட்டிக்கு வரையப்படும் ஓவியத்திற்கான திருக்குறள் பற்றித் தெரிவிக்கப்படும்.

3. வரைந்த ஓவியங்களை 22.02.2017 ஆம் தேதிக்குள் திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தில் ஒப்படைக்க வேண்டும்.

4. ஓவியத் தளம்: canvass on Structure வண்ணம்: Acrylic paint ஓவியப் படைப்பின் அளவு: 2’X 2’ (2 அடிக்கு 2 அடி), with structure என அமைந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

5. பங்கேற்பாளர்களின் ஓவியங்கள் திருப்பித் தரப்படமாட்டா.

தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் : +918072878844 +919500012272